திருச்சி விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு விமான சேவைகள் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்த வகையில் நேற்று இரவு சென்னையில் இருந்து திருச்சிக்கும், திருச்சியிலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் விமான சேவை ரத்து செய்யப்பட்டது.
சென்னையில் இருந்து இரவு 9.20 மணிக்கு திருச்சிக்கு வந்து மீண்டும் திருச்சியிலிருந்து சென்னை நோக்கி 9.50 மணிக்கு புறப்பட்டுச் செல்லும் இண்டிகோ விமான சேவை தொழில்நுட்ப காரணங்களால் ரத்து செய்யப்படுவதாக இண்டிகோ நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.