தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்ததில் சிறுவன் உயிரிழப்பு – திருச்சி அருகே பரிதாபம்!  

0 377
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வளநாடு அருகே உள்ள சொக்கம்பட்டியைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் 5 வயது மகன் சிவராஜ். இன்று அவர்களது வீட்டின் அருகே உள்ள தண்ணீர் தொட்டியை ஒட்டி நின்று கொண்டிருந்தான்.

அப்போது தண்ணீர் தொட்டியின் ஒரு பகுதி திடீரென இடிந்து சிவராஜ் மீது விழுந்தது. இதில் சிவராஜ் சப்தம் போடவே குடும்பத்தினர் விரைந்து வந்து படுகாயமடைந்த சிவராஜை மீட்டு சிகிச்சைக்காக வளநாடு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியதை அடுத்து உடல் பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக வளநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறியhttps://chat.whatsapp.com/GIK8EHtoSzZArrJx8DcPlA

Leave A Reply

Your email address will not be published.