தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்

0 465
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் அரசு கலைஅறிவியல் கல்லூரி அமைக்கப்படும் என நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மணப்பாறை பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மணப்பாறை பகுதி மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையான அரசு கல்லூரியின் கோரிக்கையை நிறைவேற்றித்தந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து இன்று நடைபெற்ற மணப்பாறை ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டத்தில் சிறப்பு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஒன்றியக்குழு தலைவர் அமிர்தவள்ளி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் முதல் தீர்மானமாக நன்றி அறிவிப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் மணப்பாறையில் கலை அறிவியல் கல்லூரி அமைக்க அனுமதி வழஙகிய தமிழக முதல்வருக்கு ஒன்றியக்குழுவின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்வதாக கூறப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.