கலைக் காவிரி நுண்கலைக்கல்லூரி தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றம் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டது
உலக பூமி தினத்தை முன்னிட்டு கலைக் காவிரி நுண்கலைக்கல்லூரி தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றம் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
நெகிழியைத் தவிர்ப்போம் புவியைக் காப்போம், புவி வெப்பமாதலைக் குறைக்க தண்ணீர் சிக்கனம், மின்சார சிக்கனம், எரிபொருள் சிக்கனம் கடைபிடிப்போம், மரக்கன்றுகளை நட்டு பாதுகாப்பாய் வளர்ப்போம், மண்வளம் காப்போம், மரங்களே மண் அரிப்பைத் தடுக்கும்.மகத்தான ஆயுதம், கனிம வளங்களை காப்போம் காற்று மாசு தடுப்போம், உயிர்க்காற்று பெற மரங்களே கருப்பையாம், வருங்கால தலைமுறைக்கு மரங்களே சொத்தாகும் போன்ற விழிப்புணர்வு வாசம் அடங்கிய மனித சங்கிலி பேரணி நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து வளாகத்தில் நாவல் புங்கன் மரக் கன்று நடப்பட்டது. இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் ப. நடராஜன் முன்னிலை வகித்து மரக்கன்று நட்டு வைத்தார். தண்ணீர் அமைப்பின் செயல்தலைவர் கே.சி.நீலமேகம், செயலாளர் கி.சதீஷ் குமார், நிர்வாகக் குழு உறுப்பினர் R.K ராஜா மற்றும் மாணவர் மன்ற உறுப்பினர்கள் ஆகாஷ், ஹரிஹரதாஸ், சதீஷ் குமார், கலைவாணன், இன்பன் பிரகாஷ்ராஜ், சகாய கிளிண்டன், ரெங்கபிரியா, காயத்ரி, நித்யா, அன்னபூரணி, நோயல், ஜெரோன் ஆகியோர் பங்கேற்றனர்.
