திருநெடுங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் அதிமுகவில் இருந்து நீக்கம்; கட்சியின் கட்டுப்பாடுகளை மீறியதாக குற்றச்சாட்டு!

0 526
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியம், திருநெடுங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் ஸ்ரீநிதி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-
நான் (ஸ்ரீநிதி) அதிமுக பொதுக்குழு உறுப்பினர் பதவியில் இருந்து வந்தேன். இந்த நிலையில் நேற்று முன்தினம் தேசிய ஊராட்சிகள் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கிராம சபைக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் துணை ஆட்சியர், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கிராமசபை கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் வழங்கப்பட்ட வாழ்த்து மடலை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஊராட்சி மன்ற தலைவர் ஆகிய எனக்கு வழங்கினார். கூட்டம் நிறைவு பெற்றதையடுத்து

 

நேற்று அதிமுக உட்கட்சித் தேர்தல் லால்குடியில் உள்ள ஒரு மண்டபத்தில் நடைபெற்றது. இதில் நான் பொதுக்குழு உறுப்பினர் தொகை செலுத்த சென்றபோது பெண் என்றுகூட பார்க்காமல் என்னை தடுத்து தகராறு செய்து, என்னை வெளியில் தள்ளினர். நான் மாவட்ட செயலாளர் ப.குமாரிடம் சென்றபோது அவர் 13.4.2022 அன்றில் இருந்து என்னை கட்சி பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினரில் இருந்தும் நீக்கி விட்டதாக தகவல் தெரிவித்தார். ஆனால் தலைமையிலிருந்து இதுநாள் வரையிலும் எந்தவித அறிக்கையும் வரவில்லை. ஊராட்சி மன்ற தலைவராக நான் அமைச்சரிடம் வாங்கிய வாழ்த்து மடலை வைத்து என்னை அடிப்படை உறுப்பினரில் இருந்தும், பொதுக்குழு உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கிவிட்டார்கள்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இதுகுறித்து அதிமுக நிர்வாகிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறுகையில், ஊராட்சி மன்றத் தலைவராக ஸ்ரீநிதியும், அவரது கணவர் சதீஸ்குமாரும் கடந்த சில நாட்களாகவே திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்கள். மேலும் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் சதீஸ்குமார்

 

பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு மாலை அணிவித்து வரவேற்கும் புகைப்படங்கள் உள்பட பல புகார்கள் வந்த வண்ணம் இருந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு முதலமைச்சர் வாழ்த்துமடல் வழங்கியதற்காக ஸ்ரீநிதி பொதுக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்படவில்லை. கணவன், மனைவி இருவரும் அதிமுக கட்சியின் கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் மீறி திமுகவிற்கு ஆதவராக செயல்பட்டு வந்ததால் மட்டுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கூறுகிறார்கள். திருநெடுங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் ஸ்ரீநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் மாவட்ட செயலாளரிடம் சென்று கேட்டபோது அவர், 13.4.2022 அன்றில் இருந்து என்னை கட்சி பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினரில் இருந்தும் நீக்கி விட்டதாக தகவல் தெரிவித்தார் என கூறியிருந்தார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூறுகையில், கணவன்-மனைவி இருவரும் அதிமுக-வின் கட்டுப்பாடுகளை மீறுவதாகவும், திமுகவிற்கு ஆதரவாக செயல்படுவதாகவும் தொடர்ந்து வந்த புகாரை அடுத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு, இதுகுறித்து கட்சியின் தலைமைக்கு தகவல் தெரிவித்து ஊராட்சி மன்ற தலைவர் ஸ்ரீநிதி கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.