கண்ணனூர் அரசு பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் சார்பில் ரூ.1.50 லட்சம் பொருட்கள் வழங்கல்!

0 293
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கண்ணனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 1993ம் ஆண்டு முதல் 98ம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி ரூ1.50 லட்சம் மதிப்பிலான இரும்பு டேபிள் சேர்களை வழங்கினர். அக்கல்வி ஆண்டில் கண்ணனூர் உயர்நிலைப்பள்ளியில் பயின்ற 30 முன்னாள் மாணவர்கள் தங்களுக்குள்ளே நிதி

 

திரட்டி ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள டேபிள் சேர்கள் மற்றும் 10 மின் விசிறிகள் 10 சாரண சாரணீய இயக்கத்தை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு சீருடைகள் ஆகியவற்றை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் லால்குடி மாவட்ட கல்வி அலுவலர் அம்பிகாபதி தலைமை ஆசிரியர் பெரியசாமி துணைத் தலைமையாசிரியர் கனகராஜ் உள்ளிட்டோர் மற்றும் இருபால் ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.