காவலர் குடும்பத்துக்கு காவலர்கள் ரூ.15 லட்சத்து 97 ஆயிரம் நிதிஉதவி!

0 408
Stalin trichy visit

நாகப்பட்டினத்தை சேர்ந்தவர் மோகன்(வயது 42). இவர் தமிழ்நாடு காவல்துறையில் 2002-ம் ஆண்டு பணிக்கு சேர்ந்து, திருச்சியில் காவலர் பயிற்சி பள்ளியில் பணியாற்றி வந்தார். இதையடுத்து அவர் சில ஆண்டுகளில் சென்னைக்கு மாறுதலாகி அங்கு பணியாற்றி வந்தார். இந்தநிலையில் கடந்த நவம்பர் மாதம் சாலை விபத்தில்

 

மோகன் இறந்து விட்டார். இதையடுத்து 2002-ம் ஆண்டில் அவருடன் பணியாற்றிய 3,300 காவலர்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தற்போது பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் இணைந்து மோகனின் குடும்பத்துக்கு தங்களால் முடிந்த நிதி உதவியாக ரூ.15 லட்சத்து 97 ஆயிரத்தை சேர்த்தனர். இந்த தொகையை திருச்சியில் ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் அருகே ஒரு மண்டபத்தில் மோகனின் குடும்பத்தினரிடம் காவலர்கள் வழங்கினார்கள்.

Leave A Reply

Your email address will not be published.