பஞ்சப்பூர் பசுமை பூங்காவை சீரமைக்க தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு!

0 413
Stalin trichy visit

பஞ்சப்பூரில் அமைந்துள்ள பசுமை பூங்காவை சீரமைக்க வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனுவை தபாலில் அனுப்பப்பட்டுள்ளது.


திருச்சி மாவட்டம் பஞ்சப் ஊரில் அமைந்துள்ள பசுமை பூங்காவிற்கு எடமலைப்பட்டிபுதூர் ராமச்சந்திரன் நகர் மற்றும் பஞ்சு ஆகிய பகுதிகளிலிருந்து பொதுமக்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் உடற்பயிற்சி செய்வதும், நடைபெற்று வருவதும் பழக்கமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பூங்காவிற்கு அனுமதி வழங்காத நிலையில் பூங்காவில் உள்ள அனைத்து பொருட்களும் பழுதடைந்து, சிறுவர் விளையாடும் ஊஞ்சல் ராட்டினம் உள்ளிட்டவை பழுதடைந்து காணப்படுவதாகவும், சுற்றுசுவர் முள்வேலிகள் அனைத்தும் பழுதடைந்து இருப்பதால் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி மாவட்ட பாஜகவினர் சார்பாக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என் நேருவிடம் புகைப்படத்துடன் கூடிய கோரிக்கை மனுவை முன்வைத்துள்ளனர்.

மேலும் பஞ்சப்பூர் பசுமை பூங்காவில் உடனடியாக சீரமைக்க வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனுவை தபாலில் அனுப்பி உள்ளனர்.

 

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய…https://chat.whatsapp.com/GHoBSZRd0IRL3LL0595Pg8

Leave A Reply

Your email address will not be published.