திருச்சி மாநகர காவல்துறை சார்பில் ஓட்டுநர் நடத்துநர்களுக்கு குற்றத் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்
திருச்சி மாநகரம், சத்திரம் பேருந்து நிலையத்தில் மாநகர காவல்துறை சார்பில், மாநகர பேருந்து மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கான “குற்றத்தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்” திருச்சி மாநகர வடக்கு காவல் துணை ஆணையர் R.சக்திவேல் முன்னிலையில் நடத்தப்பட்டது. மேற்கண்ட கூட்டத்தில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களிடம் குற்றவாளிகள் மற்றும் கெட்ட நடத்தைக்காரர்களின் புகைப்பட ஆல்பங்களை காண்பித்து, குற்றவாளிகள் பற்றி தகவல்கள் தெரிந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல்கள் தெரிவிக்க காவல்துறை சார்பில் உதவி எண்கள் மற்றும் அலைப்பேசி எண்கள் கொடுக்கப்பட்டது. ஆய்வாளர் தலைமையில் வாட்ஸ்அப் குழு அமைக்கப்பட்டு, அதில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் உறுப்பினர்களாக இணைக்கப்பட்டு பேருந்துகளில் சந்தேக நபர்கள் யாராவது அடிக்கடி தொடர்ந்து பயணம் செய்தவதை கண்டறிந்து குற்றவாளிகளை பற்றிய தகவல்களை காவல்துறைக்கு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டள்ளது. மேலும் பேருந்துகளில் பயணம் செய்யும் பொதுமக்களின் அனைத்து உடமைகளுக்கு, ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கும் பொறுப்பு உள்ளது என்பதை அவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டள்ளது. திருச்சி மாநகரத்தில் குற்றங்களை தடுக்கும்பொருட்டு காவல்துறையோடு ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் இணைந்து செயல்படவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் காவல் உதவி ஆணையர் காந்திமார்க்கெட் சரகம் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டார்கள்.
மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்று “குற்றத்தடுப்பு விழிப்புணர்வு கூட்டங்கள்” தொடர்ந்து நடைபெறும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.