15 வயது சிறுமியை திருமணம் செய்து துன்புறுத்தல் – மீட்ட சமூக நல அலுவலர்

0 325
Stalin trichy visit

சிறுமியை திருமணம் செய்து கொண்டதோடு மட்டுமல்லாமல் பல்வேறு வகையில் துன்புறுத்தல்களை செய்து வந்த இளைஞர் – வட்டார சமூக நல அலுவலரின் அதிரடி நடவடிக்கையால் சிறுமி மீட்பு

திருச்சி மாவட்டம் முசிறி அருகிலுள்ள பூசாரிபட்டி கிராமத்தை சேர்ந்த சேகர் என்பவரின் மகன் ராமராசு (22) – இவர் தண்டலை புத்தூரை சேர்ந்த 15 வயது சிறுமியை புளியஞ்சோலை அடிவாரத்தில் உள்ள விநாயகர் கோவிலில் கடந்த 3ஆம் தேதி திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சிறுமி மைனர் என்பதால் இது குறித்து வட்டார சமூக நல அலுவலர் செந்தாமரைக்கு புகார் கிடைத்தது – தகவலின் அடிப்படையில் பூசாரிபட்டி நேரடியாக சென்று முழுமையாக விசாரணை செய்ததில் சிறுமிக்கு இளைஞர் அதிகபடியான தொந்தரவு கொடுத்து வந்ததும் தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து சிறுமியை மீட்டு திருச்சியில் உள்ள காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.