திருச்சி மெயில் செய்தி எதிரொலி: 100 நாள் வேலை மீண்டும் வழங்கல் – கிராமமக்கள் நன்றி
திருச்சி மெயில் செய்தி எதிரொலியாக 100 நாள் வேலைத்திட்டம் கிடைத்ததற்கு கிளியூர் கிராம பொதுமக்களுக்கு மகிழ்ச்சி மற்றும் நன்றியை தெரிவித்தனர்
திருச்சி திருவெறும்பூர் அருகே கிளியூர் ஊராட்சியில் நிதி பற்றாக்குறையால் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் 100 நாள் வேலையை மீண்டும் தொடர்ந்து வழங்க கோரி 100 நாள் வேலை பணியாளர்கள் திருவெறும்பூர் ஒன்றிய அலுவலகத்தில் நேற்றைய முன் தினம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இந்த செய்தியை திருச்சி மெயில் செய்தி வெளியிட்டது தொடர்ந்து இன்று காலை கிளியூர் கிராம பொது மக்களுக்கு வேலை கொடுக்கப்பட்டது
திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிளியூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை பணியாளர்களுக்கு கடந்த சில மாதங்களாக பணி வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஊராட்சியில் நிதி பற்றாக்குறையால் 100 நாள் வேலை வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள 100 நாள் வேலை பணியாளர்கள் தங்களுக்கு தொடர்ந்து 100 நாள் வேலை வழங்கிட வேண்டுமென வலியுறுத்தி, விவசாய சங்கத்தின் நிர்வாகிகள் சங்கிலி முத்து, முருகேசன் ஆகியோர் தலைமையில் திருவெறும்பூர் ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இந்த மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுத்து அனைவருக்கும் பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இல்லை என்றால் கிளியூரில் பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து இன்று காலை 7 மணி அளவில் கிளியூர் கிராம கிராமபொது மக்களுக்கு 100 நாள் வேலை திட்டம் கிடைத்தது செய்தி வெளியிட்ட திருச்சி மெயில் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்தனர்