விளையாட்டு வீரரை வெட்டி கொலை செய்ய முயன்ற ரவுடி குண்டர் சட்டத்தில் கைது

0 397
Stalin trichy visit

கடந்த 24.04.22-ந்தேதி ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அம்மாமண்டபம் புதுத்தெருவில் முன்விரோதம் காரணமாக விளையாட்டு வீரரை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றதாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து, வழக்கின் சம்மந்தப்பட்ட எதிரி பிரவின்குமார்( 25)  என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணையில் எதிரி பிரவின்குமார் இளைஞர்களை சீரழிக்கும் கஞ்சா போதைபொருள் விற்பனை வழக்கு உட்பட பல வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

கடந்த 22.04.22-ந்தேதி அரியமங்கலம் காவல் நிலைய எல்லைக்குப்பட்ட மேலஅம்பிகாபுரத்தில் பல்பொருள் அங்காடியில் ஷட்டரை பூட்டை உடைத்து ரூபாய்.15,500/மதிப்புள்ள பொருள்களை திருடுபோய்விட்டதாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து, வழக்கின் சம்மந்தப்பட்ட எதிரி பரணிகுமார் வயது 21 த.பெ.முத்து என்பவரை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணையில் எதிரி பரணிகுமார் மீது கோட்டை மற்றும் காந்திமார்க்கெட் காவல் நிலைய பகுதிகளில் 10 இருசக்கர வாகனம் திருட்டு வழக்கும், கோட்டை காவல் நிலைய பகுதியில் முன்விரோதத்தால் இருசக்கர வாகனத்தை எரிந்த வழக்கு உட்பட மொத்தம் 15 வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

எனவே, எதிரிகள் பிரவின்குமார் மற்றும் பரணிகுமார் ஆகியோர்கள் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவதும், ஆயுதங்களை கொண்டு பொதுமக்களை அச்சுறுத்துவதும், இளைஞர்களை சீரழிக்கும் கஞ்சா போதைபொருள் விற்பனை செய்வது என விசாரணையில் தெரிய வருவதால், மேற்கண்ட எதிரிகளின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு சம்மந்தப்பட்ட காவல் ஆய்வாளர்கள் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன் மேற்படி எதிரிகளை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரிகளுக்கு குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்தும் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களால் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.