திருச்சியில் கோவில் ஆணையர்கள் பதவி உயர்வு

1. திருச்சி மண்டல இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையராக எம்.லட்சுமணன் நியமனம், இவர் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் மேலாளராக பணிபுரிந்து உதவி ஆணையராக பதவி உயர்வு பெற்று உள்ளார் .

2. திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானவர் சுவாமி திருக்கோயில் உதவி ஆணையராக இரா.ஹரிஹரசுப்பிரமணியன் நியமனம், இவர் திருச்சி மண்டல இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலத்தில் மேலாளராக பணிபுரிந்து உதவி ஆணையராக பதவி உயர்வு பெற்று உள்ளார்.

3.திருச்சி திருவானைக்கோயில் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில் உதவி ஆணையராக ஆ.ரவிச்சந்திரன் நியமனம். இவர் தஞ்சை மண்டல இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலத்தில் மேலாளராக பணிபுரிந்து உதவி ஆணையராக பதவி உயர்வு பெற்று உள்ளார்.