திருச்சி, மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார்கோவில் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற உத்தமர்கோவில் சித்திரை தேரோட்ட விழா நடைபெற்ளது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தேரோட்ட விழாவினை முன்னிட்டு கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனைத்தொடர்ந்து புருஷோத்தம பெருமாள் அனு தினமும் முறையே சூரியபிரபை வாகனம், அனுமந்த வாகனம், கருட வாகனம், சேஷ வாகனம் யானை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடித்தல் இன்று காலை 5 மணிக்கு புருஷோத்தம பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து ஸ்ரீதேவி பூதேவியுடன் புருஷோத்தம பெருமாள் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதனைத்தொடர்ந்து கோவிந்தா… கோவிந்தா… என்று பக்தி கோஷங்கள் முழங்க ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேர் கோவிலை சுற்றி தேரோடும் வீதியில் வீதியுலா வந்து நிலையை அடைந்தது.
இந்த தேரோட்ட விழாவில் ஏராளமான பக்தர்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து வழிப்பட்டனர்.