அரிஸ்டோ மேம்பாலம் இணைப்பு பணி – அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்
நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் , நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த திருச்சி அரிஸ்டோ மேம்பாலம் சென்னை அணுகு சாலை இணைப்புப் பணிகளை மீண்டும் இன்று (14.5.22) தொடங்கி வைத்து, திட்ட வரைபடத்தினைப் பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.
பின்னர் மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.

திருச்சி சந்திப்பு அருகில் அரிஸ்டோ சாலை மேம்பாலம் கட்டும் பணி க்கு ரூபாய் 74 கோடி மதிப்பீட்டிற்கு நிர்வாக அனுமதி 22 2011 அன்று வழங்கப்பட்டது இதன்திருத்திய நிர்வாக ஒப்புதல் ரூபாய் 115.59 கோடி ஆகும். இதில் திண்டுக்கல் செல்லும் பாதை மற்றும் ரயில் நிலையம் செல்லும் பாதைக்கான பணிகளும்,
மத்திய பேருந்து நிலையம் செல்லும் பாதை மற்றும் மதுரை செல்லும் பாதைப் பணிகளும் ஏற்கனவே முடிக்கப்பட்டு, போக்குவரத்திற்கு திறந்து விடப்பட்டது. சென்னை செல்லும் பாதையில் பாலப் பணிகள் முடிவுற்று 134 மீட்டர் நீளமுள்ள அணுகுசாலை பகுதியானது ராணுவ நிலத்தில் வருகிறது. இந்திய பாதுகாப்புத் துறை அனுமதி வழங்க தாமதமானதால் அணுகு சாலை அமைக்கும் பணி மட்டும் முடியாமல் இருந்தது. தற்போது புதுதில்லியில் உள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சகம் 9. 11 .2021 அன்று உள்நுழைவு அனுமதி வழங்கியதன் அடிப்படையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்த அனுமதி வழங்கியது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆனது 4. 5. 2022 அன்று செயலாக்கப்பட்டு, 5.5.2022 அன்று ராணுவ நிலம் நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது . சென்னை செல்லும் பாதையில் மீதமுள்ள ரூபாய் 3.53 கோடி மதிப்பிற்கு அணுகுசாலை, சேவை சாலை, மழைநீர் வடிகால் அமைப்பு மற்றும் ராணுவ நிலம் சுற்றுச்சுவர் ஆகிய பணிகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது இந்த பணியானது மூன்று மாதத்திற்குள் முடிக்கப்பட்டு விடும் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் சு. சிவராசு., வணக்கத்திற்குரிய மேயர் மு அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் அ.சௌந்தரபாண்டியன், செ .ஸ்டாலின்குமார், .ந.தியாகராஜன், எம்.பழனியாண்டி, சீ. கதிரவன்,
இரா. ராஜேந்திரன் (சேலம் வடக்கு ) நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்புப் பொறியாளர்கள், வி.சீனிவாச ராகவன்,
ஆர்.கிருஷ்ணசாமி, கோட்டப் பொறியாளர் எஸ்.முருகானந்தம், மாவட்ட ஊராட்சித் தலைவர் த.இராஜேந்திரன் மற்றும் கோட்டத் தலைவர்கள், மாமன்ற உறுப்பி னர்கள்,முக்கியப் பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.