கொரோனா சான்றிதழை ஏற்க மறுக்கும் துபாய் – திருச்சி விமான நிலையத்தில் காத்து கிடக்கும் பயணிகள்!!

0 441
Stalin trichy visit

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகளுக்கு 2 மணி நேரத்திற்கு முன்னதாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

அவ்வாறு பயணிகளுக்கு கொரோனா தோற்று இல்லாத பயணிகள் விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் இந்த கொரோனா சான்றிதழை துபாய் நாட்டு அரசு ஏற்றுக்கொள்ள மறுப்பதாகவும், வேறு வகையான கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அவர்கள் வலியுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் திருச்சியில் இருந்து இன்று காலை துபாய் செல்ல வேண்டிய 130க்கும் மேற்பட்ட பயணிகள் விமான நிலையத்தில் வெகு நேரமாக காத்திருந்தனர். பின்னர் பயணிகள் சார்ஜாவுக்கு அனுப்பி வைக்கபட்டனர்.

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய https://chat.whatsapp.com/GHoBSZRd0IRL3LL0595Pg8

Leave A Reply

Your email address will not be published.