உடல் ஊனமுற்றோருக்கான தமிழ்நாடு மாநில செஸ் சாம்பியன்ஷிப் 2022 போட்டி

0 427
Stalin trichy visit

14.05.2022 சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் பொன்மலைப்பட்டி
செயின்ட் மேரீஸ் நர்சரி & பிரைமரி பள்ளியில் துணை தலைவர் ஏ. கலைச்செல்வன் தலைமையில் ,

மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி. நீலமேகம்,தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் செஸ் சங்கம் செயலாளர் செல்வி. கஸ்தூரி, ரோட்டரி கிளப் வக்கீல் அமலசந்திரன் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.

தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் செஸ் சங்கம் பொருளாளர் எடிவின் பால்ராஜ் வரவேற்றார்.

பாவேந்தர் காலேஜ் ஆப் என்ஜினீயரிங் & டெக்னாலஜி இயக்குனர் உமா சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் செஸ் சங்கம் இணைச் செயலாளர் . ஏ. அடைக்கலவன், போட்டியின் தலைமை நடுவர் எம்.பாஸ்கரன், போன்றவர்கள் போட்டியை சிறப்பித்தார்கள் .

பயிற்சியாளர் காணிக்கை இருதயராஜ் நன்றி கூறினார்.

விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியை கவிதா சுரேஷ், அலெக்ஸ் , கலந்துக் கொண்டார்கள்.

போட்டியிற்கு விழுப்புரம், சென்னை மதுரை புதுக்கோட்டை , கள்ளக்குறிச்சி , திருச்சி , நாமக்கல் . ஈரோடு திருவண்ணாமலை போன்ற மாவட்டத்திலிருந்து 30ம் மேற்ப்பட்ட வீரர்கள் கலந்துக் கொண்டு இருக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.