மணப்பாறை அருகே துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது வெடிக்காமல் மாயமான 4 ராக்கெட் லாஞ்சர் குண்டுகள் கண்டுபிடிப்பு.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வீரமலை அடிவாரத்தில் பல்வேறு படைப்பிரிவுகளைச் சேர்ந்த இராணுவ வீரர்களின் துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொள்வது வழக்கம். இதே போல் கடந்த ஜனவரி மாதம் கோவையில் உள்ள ஒரு ராணுவ பிரிவினரின் துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற்றதாக கூறப்படுகின்றது. இந்த பயிற்சியின் வெடித்த குண்டுகளின் காலி குப்பிகளையும் வெடிக்காத குண்டுகளையும் வீரர்கள் சேகரித்து எடுத்துச் சென்று விடுவர். இந்நிலையில் பயிற்சியின்போது வெடிக்காத இரண்டு ராக்கெட் லாஞ்சர் குண்டுகள் மாயமானது. இதுதொடர்பாக வையம்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் வீரமலைப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்ற போது வெடிக்காமல் இருந்த ராக்கெட் லாஞ்சர் குண்டுகள் வெவ்வேறு இடங்களில் இருப்பது தெரியவந்தது. பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த வருவாய்துறையினர் மற்றும் வையம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த பின்னர் இதுபற்றிய தகவலை சம்மந்தப்பட்ட ராணுவ படைப்பிரிவின் அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். அதன்படி சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு குழுவினர் உள்ளிட்டடோர் இன்று வீரமலை பகுதிக்கு வந்து வெடிக்காமல் கிடந்த மொத்தம் 4 ராக்கெட் லாஞ்சர் குண்டுகளை எடுத்து ஜேசிபி மூலம் குழி தோண்டி மண்ணில் புதைத்து வைத்து விட்டுச் சென்றனர்.