துவாக்குடியில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு முகூர்த்த கால் நடப்பட்டது

0 360
Stalin trichy visit

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடியில் சித்திரை ஏர்முனை விழாவை முன்னிட்டு வரும் 25ஆம் தேதி ஜல்லிகட்டு போட்டி நடைபெற உள்ளதை முன்னிட்டு முகூர்த்தம் கால் நடப்பட்டது.

திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூரில் ஜல்லிக்கட்டு கடந்த ஜனவரி மாதம் மாட்டுப்பொங்கல் அன்று நடைபெற்றது அதனையடுத்து தொடர்ந்து பல்வேறு ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடியில் 25-ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த கிராமத்தினர் முடிவு செய்து அதற்கான முகூர்த்தக்கால் நடும் பணி அங்காளம்மன் கோவில் திடலில் நடந்தது.

சித்திரை ஏர்முனை விழாவை முன்னிட்டு பாரம்பரிய ஜல்லிக்கட்டு விழாவிற்கான ஏற்பாடுகளை துவாக்குடி கிராம அம்பலக்காரர்கள் கிராம கமிட்டி மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு விழாவில் திருச்சி புதுக்கோட்டை மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 700 காளைகளும் மற்றும் 500 மாடுபிடி வீரர்களும் கலந்து கொள்வார்கள்.என்று கிராம முக்கியஸ்தர்கள் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.