சிறுகனூர் காவல் நிலையத்தில் மாவட்ட எஸ்பி திடீர் ஆய்வு
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சிறுகனூர் காவல் நிலையத்தில் மாவட்ட எஸ்பி சுஜித் குமார்திடீர் ஆய்வு செய்தார்.
திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் அவர்கள் திருச்சியிலிருந்து திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை திருச்சி மாவட்ட எல்லை வரை இன்று சைக்கிளில் சென்று ஆய்வு செய்தார் அப்போது அடிக்கடி விபத்து நடைபெறும் இடங்களை பார்வையிட்டு போக்குவரத்து ஆய்வாளரிடம் கலந்து ஆலோசனை செய்தார். இதனைத் தொடர்ந்து திரும்பிச் செல்லும்போது திடீர் சிறுகனூர் காவல் நிலையத்திற்கு வருகை தந்து கோப்புகளை பார்வையிட்டார்.