அதிமுக முன்னாள் எம்.பி. குமாரின் பேச்சுக்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலடி
திருவெறும்பூர் அருகே உள்ள பொன்மலைப்பட்டி திருச்சியில் கேட்குமா அபிராமி பொன்மலை பகுதி சார்பில் நடந்த அதிமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்திற்கு பொன்மலை பகுதி செயலாளர் தர்மராஜ் தலைமை வகித்தார்.
திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிசிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது.
அரசின் திட்டப்பணிகளை அமைச்சர்கள் தொடங்கி வைக்கும் பணியாற்றி வருகிறார்கள்.
தமிழ் இனத்தை பாதுகாக்க குரல் கொடுக்கும் தலைவரை முதல்வராக நாம் பெற்றுள்ளோம்.
இந்த ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும் எனக்கு இரண்டு திட்டங்கள் மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது ஒன்று அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்கிற அறிவிப்பு மற்றொன்று 123 கோடி ரூபாய் மதிப்புள்ள நிவாரன பொருட்களை இலங்கைக்கு அனுப்பி வைத்தது.
எந்த தேர்தலாக இருந்தாலும் மக்கள் எங்கள் பக்கம் தான் என்பதை நிருபிப்போம் என்றார்.
மே தினத்தன்று திருவெறும்பூரில் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்பியுமான குமார் நேரு குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவித்தார் அதற்கு பதிலளிக்கும் வகையில்
திமுக முதன்மைச் செயலாளரும் தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான
கே.என்.நேரு சிறப்பு விருந்தினராககலந்து கொண்டு பேசியதாவது
ஓர் ஆண்டில் நேரு 100 கோடி ரூபாய் சம்பாதித்து விட்டதாகும், கல்லூரி கடனை அடைத்து விட்டதாகவும் 200 ஏக்கர் வாங்கி விட்டதாகவும், அப்படி என்னிடம் 200 கோடி இருந்தால் அதனை அரசு எடுத்துக் கொள்ளட்டும் உங்களால் முடிந்தால் உங்கள் கட்சி பிரச்சனையை தீர்த்துக் கொள்ளுங்கள் வழக்கை போடுங்கள் சந்திப்போம்.
ஏற்கனவே என் மீது 19 வழக்குகள் போட்டார்கள் அதில் 9 கொலை வழக்குகள் அதிலிருந்து வெளியில் வந்துதான் தற்பொழுது அமைச்சராகி உள்ளேன்.
எதிர்கட்சியினர் குற்றம்சாட்டுவதுபோல். நான் அவ்வாறு சம்பாதிக்கவில்லை, அப்படி சம்பாதித்தால் அது மக்களுக்காக தான் செலவழிக்கப்படும்.
கே.என்.நேரு புனிதரா என கேட்கிறார்கள்.
அரசியலில் யார் தான் புனிதர் இருக்கிறார்கள்.
தி.மு.க அரசு பொறுப்பேற்றபோது 5 லட்சம் கோடி ரூபாய் கடனாக இருந்தது. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நான்கு மாதங்கள் கொரொனா, அதன் பின்பு வெள்ளம், அதன் பின்பு சட்டமன்ற கூட்டத்தொடர் இருந்தது மீதமிருந்த சில மாதங்களில் தான் பல்வேறு திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் மட்டும் 850 கோடியில் புதிய பேருந்து முனையம், மார்கெட்
120 கோடி ரூபாயில் கூட்டு குடிநீர் திட்டம், தடுப்பணை கட்டும் பணிகள் நடைபெறுகிறது.
இது போன்ற எண்ணற்ற பணிகளை செய்து வருகிறோம்.
திருச்சி மாவட்டம் இன்னும் இரண்டு ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சி பெறும். சென்னைக்கு அடுத்தப்படியாக திருச்சி என்கிற நிலைக்கு மாவட்டத்தை உயர்த்துவோம்.
நாங்கள் நிச்சயம் நேர்மையாக தான் பணியாற்றுவோம், எந்த தவறும் செய்ய மாட்டோம் என உறுதியாக தெரிவித்து கொள்கிறேன் என்றார்.
திமுக பொருளாளரும் நாடாளுமன்ற நிலைக் குழு தலைவருமான
டி.ஆர்.பாலு பேசியதாவது

கொரொனா காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 5 ஆயிரம் கொடுங்கள் என அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கேட்டார் ஆனால் ரூ.1000 தான் தந்தார்கள். திமுக ஆட்சிக்கு வந்த பின்பு ஸ்டாலின் மீதமுள்ள ரூ. 4 ஆயிரம் வழங்கினார்.
கொரொனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணம், பெட்ரோல் விலை ரூ.3 குறைவு, பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், 12, லட்சத்து 21 ஆயிரம் பேருக்கு ரூ 4 ஆயிரத்து 800 கோடி நகைக்கடன் ரத்து, 2 ஆயிரத்து 700 கோடி ரூபாய் சுய உதவி குழுக்கள் கடன் ரத்து, 13,000 ஆயிரம் கோவில் புணரமைத்து ஒரு கால பூஜை அறிவித்து பூஜை செய்பவர்களுக்கு ரூ.1000 நிதி வழங்கியது.
என அறநிலையத்துறையில் பல்வேறு நல திட்டங்கள்,
உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவி தொகை, தொழில் முதலீடு, பயிர் கடன் தள்ளுபடி, 19 ஆயிரம் கோடி அகவிலைப்படி ஒதுக்கீடு இப்படி பல்வேறு திட்டங்கள் ஓர் ஆண்டில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
திராவிட மாடல் என ஸ்டாலின் கூறுகிறார். திராவிட மாடல் என்பது பலருக்கு புரியவில்லை. அண்ணா, கலைஞர் இருவரும் திராவிட மாடல் ஆட்சி தான் நடத்தினார்கள்.
கடமை, கண்ணியம், கட்டுபாடு என அண்ணா சுருக்கமாக கூறினார்.
கலைஞர் ஐம்பெரும் முழக்கங்களை முன் வைத்து ஆட்சி நடத்தினார்.
அவர்கள் கூறியதன் அடிப்படையிலும்
மாநில சுய ஆட்சி இல்லையென்றால் சமூக நீதி வருவதற்கு வாய்ப்பில்லை. மாநில சுய ஆட்சி இருப்பதால் தான் 69% இட ஒதுக்கீடு இருக்கிறது.
மாநில சுய ஆட்சியும் சமூக நீதியும் இணைத்து செயல்படும் ஆட்சி தான் திராவிட மாடல் ஆட்சி.
மாநில சுயாட்சி என்பது அடிப்படை தேவை. மாநில சுயாட்சிக்காக கலைஞர் ராஜமன்னார் குழுவை அமைத்தார். அந்த குழுவின் பரிந்துரை வந்த பின்பு நாடே அது குறித்து பேசியது.
மத்திய அரசில் அதிகார குவியல் இருந்தது அதனை மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என ஜோதிபாசு, பரூக் அப்துல்லா உள்ளிட்ட பல மாநில முதலமைச்சர்கள் மத்திய அரசை நெருக்கடிக்கு உள்ளாக்கினார்கள்.
சர்க்காரியா கமிஷன், வெங்கடாச்சலயா கமிஷன் உள்ளிட்ட குழுக்கன் அதிகாரத்தை பகிர்ந்தளிக்க வேண்டும் என கூறியது. ஆனால் காங்கிரஸ் அரசும் அதை செய்யவில்லை, பா.ஜ.க அரசும் செய்யவில்லை.
கிட்டத்தட்ட 51 ஆண்டுகளாகியும் மாநில சுயாட்சி குறித்து இன்றும் பேசப்படுகிறது.
தி.மு.க அரசு தொடர்ந்து நீடிக்க வேண்டும் என எதிர்க்கட்சியினரும் விரும்புகிறார்கள்.
தி.மு.க தலைமையில் நடைபெறும் திராவிட மாடல் ஆட்சி குறித்து நாடு முழுவதும் எடுத்து செல்ல வேண்டும்.
சுதந்திர தினத்தன்று முதலமைச்சர்கள் தேசிய கொடி ஏற்றும் உரிமையை அனைத்து முதலமைச்சர்களுக்கும் பெற்று தந்தது கலைஞர் தான்.
அவரின் மகன் ஸ்டாலின். மத்திய அரசின் பிடரியை பிடித்து உலுக்கும் தைரியம் பெற்றவர் தான் ஸ்டாலின்.
தி.மு.க எங்களுடன் இருந்தால் என்ன என பா.ஜ.க வினர் கேட்கிறார்கள். அவர்களிடம் நான் உங்களிடம் சேர்ந்தால் நாங்கள் தேறாமல் போய் விடுவோம் என கூறினேன். தி.மு.க காங்கிரஸ் கட்சியுடம் கூட்டணி வைத்திருப்பதால் பா.ஜ.க வினர் மிகுந்த வெறுப்புடன் இருக்கிறார்கள்.
மாநில சுயாட்சி ஒரு தண்டவாளம், சமூக நீதி ஒரு தண்டவாளம் இரண்டும் இருந்தால் தான் திராவிட மாடலை முழுமையாக பெற முடியும்.
மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலை கேஸ் விலையை உயர்த்தி கொண்டு செல்கிறார்கள், அதில் பல லட்டசம் கொள்ளை அடித்துள்ளார்கள். பல்வேறு வரிகளை உயர்த்தி வருகிறார்கள். இவையெல்லாம் தாண்டி திராவிட மாடல் ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. தி.மு.க அரசு ஓர் ஆண்டில் மூன்றில் இரண்டு பங்கு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டது. வரும் நாடாளுமன்ற தேர்ததில் தி.மு.க வெற்றி பெற ஸ்டாலின் கரத்தை அனைவரும் வலுப்படுத்த வேண்டும் என்றார்.
அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு – ஒவ்வொரு திட்டப்பணிகளை தொடங்கி வைக்கும் பணியில் அனைத்து அமைச்சர்களும் பணியாற்றி வருகிறார்கள்.

தமிழ் இனத்தை பாதுகாக்க குரல் கொடுக்கும் தலைவரை நாம் பெற்றுள்ளோம்.
இந்த ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும் எனக்கு இரண்டு திட்டங்கள் மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது ஒன்று அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்கிற அறிவிப்பு மற்றொன்று 123 கோடி ரூபாய் மதிப்புள்ள நிவாரன பொருட்களை இலங்கைக்கு அனுப்பி வைத்தது.
எந்த தேர்தலாக இருந்தாலும் மக்கள் எங்கள் பக்கம் தான் என்பதை நிருபிப்போம்.
இந்த விழாவில் தலைமை கழக பேச்சாளர் ஈரோடு நிலைய கோபால், மாநகராட்சி துணை மேயர் திவ்யா, முன்னாள் எம் எல் ஏ சேகரன், திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர்கள் கருணாநிதி, மாரியப்பன் காட்டூர் பகுதி செயலாளர் நீலமேகம், மாநகராட்சி நகரமைப்பு குழு தலைவர் மதிவாணன்உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்
நாற்பத்தி எட்டாவது வட்ட செயலாளர் வரதராஜன் நன்றி கூறினார்.