திருச்சி கிராப்பட்டியை சேர்ந்த 1. மகேஸ்வரி ஆன்லைன் பிஸினஸ்ல் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் ஒரு நாளைக்கு ரூ.6500/- வீதம் 90 நாட்களுக்கு லாபம் கிடைக்கும் என நம்பி, முதலீடு செய்து ஏமாற்றப்பட்டதாகவும், 2. திருச்சி தென்னுார், ஆழ்வார்தோப்பை சேர்ந்த உசேன் என்பவர் தனது செல்போனில் பேசிய நபர் தன்னை வங்கி மேலாளர் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு தனது cibil score-ஐ உயர்த்தவதாக கூறி OTP- விபரங்களை பெற்று கிரெடிட் கார்டிலிருந்து எடுத்து விட்டதாகவும், 3. திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த சங்கீதா என்பவர் தான் online job-க்கு தேர்வாகவேண்டுமென்றால் ஒரு course complete செய்யவேண்டும் என்று google pay மூலமாக ரூ.12,500/- பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாகவும் தாங்கள் இழந்த பணத்தை திரும்ப பெற்றுத்தரக்கோரி NCRP-ல் ஆன்லைன் மூலமாக கொடுத்த மனுக்களையும் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவுப்படி காவல் ஆய்வாளர், சைபர் கிரைம் காவல்நிலையம் அவர்களால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.’
மேற்படி ஆன்லைன் மூலம் ஏமாற்றப்பட்ட பணம் புகார்தாரருக்கு திரும்ப கிடைக்கும் வகையில் திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசார் துரிதமாக செயல்பட்டு சம்மந்தப்பட்ட வங்கியின் Legal Department-க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுத்ததன் பேரில் மனுதாரர்கள் இழந்த பணம் ரூ.1,57,500/- அவரவர் வங்கி கணக்குகளில் திரும்ப சேர்க்கப்பட்டது.
மேலும் இது போன்று பணத்தை இரட்டிப்பாக்கி தருவாத ஆசைவார்த்தைகளை கூறி வரும் விளம்பரங்களையோ அல்லது அலைபேசியின் வாயிலாக வரும் அழைப்புக்களையோ நம்பி ஏமாறாமல் இருக்கவும், அறிமுகமில்லாத நபர்கள் தன்னை பேங்க் மேனேஜர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு வங்கி விபரங்களை கோரினால் அவர்களிடம் வங்கி விபரங்களையோ அல்லது சுயவிபரங்களையோ மற்றும் OTP-க்களையோ யாரிடமும் பகிர்ந்து ஏமாற வேண்டாம் எனவும், மேலும் Online job-க்காக apply செய்து பின்னர் வரும் அழைப்புகளையோ அல்லது குறுஞ்செய்தியில் வரும் எந்த ஒரு link-ம் Click செய்து உள்ளே சென்று வங்கி விபரங்களை பதிவு செய்யவேண்டாம் என்றும், அவ்வாறு யாரேனும் ஆன்லைன் மோசடி மூலம் பணத்தை இழந்து விட்டால் உடனே சைபர் கிரைம் அவசர உதவி எண்: 1930 – தொலைபேசி எண்ணை விரைவாக தொடர்பு கொள்ளுமாறு அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம் எனவும், திருச்சி மாநகரில் இதுபோன்ற ஆன்லைன் மூலம் பணமோசடி ஈடுபடுவோர் மீது கடுமையான சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.