பெண்ணை கொடுமைப்படுத்திய வழக்கில் கணவர், 2வது மனைவிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

0 383
Stalin trichy visit

கோட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கீழபுலிவார்டு ரோடு பகுதியில் வசித்து வந்த நபரை, அவரது கணவர், இரண்டாவது மனைவியுடன் சேர்ந்து 2001-ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் கொடுமை படுத்தியும், குற்றங்கருதி மிரட்டல் விடுத்ததாக திருச்சி கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் சமர்ப்பித்த புகாரின்பேரில் நீதிமன்ற ஒப்புதல் பெற்று கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வழக்கின் புலன் விசாரணையை முடித்து எதிரிகள் மீது கடந்த 07.12.2015 ஆம் தேதி இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேற்படி வழக்கில் திருச்சி கூடுதல் மகிளா நீதிமன்றத்தின் மாண்புமிகு நீதிபதி  .மணிவாசகன்  விசாரணையை முடித்து 16.05.22-ஆம் தேதி, எதிரி-1க்கு ச/பி 498(A) இதச-ன்படி 3 வருட சிறை தண்டனை மற்றும் ரூ.10,000/- அபராதமும், ச/பி 494 இதச-ன்படி 3 வருட சிறை தண்டனை மற்றும் ரூ.10,000/- அபராதமும், ச/பி 506(i) இதச-ன்படி ஒரு வருட சிறை தண்டனை மற்றும் ரூ.10,000/- அபராதமும், எதிரி-2க்கு ச/பி 494 இதச-ன்படி 3 வருட சிறை தண்டனை மற்றும் ரூ.10,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்கள். இதனை தொடர்ந்து மேற்படி இரண்டு எதிரிகளையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் கரிகாலன் ஆஜரானார். அரசு வழக்கறிஞர்

இவ்வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்த கோட்டை அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் மற்றும் காவல் ஆளிநர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் வெகுவாக பாரட்டினார்கள்

Leave A Reply

Your email address will not be published.