திருச்சி என்.ஐ.டி. நிறுவன தின விழா நாளை கொண்டாடப்படுகிறது

0 294
Stalin trichy visit

திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகம்(என்.ஐ.டி.) நிறுவன தின விழா நாளை (சனிக்கிழமை) காலை 11.30 மணிக்கு நடக்கிறது. இதில் பெங்களூருவில் உள்ள தேசிய அறிவியல் கழகத்தின் இயக்குனர் கோவிந்தன் ரங்கராஜன் சிறப்புரையாற்றுகிறார். விழாவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள், விளையாட்டு வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. இதேபோல் சிறந்த ஆசிரியர் விருதுகளும் வழங்கப்படும். நிறுவன இயக்குனர் டாக்டர் மினிஷாஜிதாமஸ், ஆளுநர்கள் மன்ற தலைவர் பாஸ்கர்பட், கல்வியின் டீன் ராமக்கல்யாண் அய்யாகரி மற்றும் பலர் கலந்து கொள்கிறார்கள்.

தேசிய கல்வி நிறுவனத்தின் தரம் குறித்து ஆண்டுதோறும் மத்திய கல்வி அமைச்சகம் வெளியிடும் என்ஐஆர்எப் என்ற பட்டியலில் திருச்சி என்.ஐ.டி. பொறியியலில் 9-வது இடத்தையும், மொத்த பட்டியலில் 24-வது இடத்தையும் பெற்றுள்ளது. இதனால் நாடு முழுவதும் உள்ள தேசிய தொழில்நுட்ப கழகங்களில் திருச்சி என்.ஐ.டி. தான் முதல்இடம் என்று இயக்குனர் மினிஷாஜி தாமஸ் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.