வீட்டில் இருந்த 10 பவுன் நகை திருட்டு; 70 பவுன் தப்பியது

0 307
Stalin trichy visit

சமயபுரம் அருகே உள்ள இனாம் சமயபுரம் சௌமியா நகரைச் சேர்ந்தவர் அம்ரித் டெனிஸ் சார்லினா (37). இவருடைய கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இதைத்தொடர்ந்து இவர் மாமனார் மற்றும் மாமியாருடன் வசித்து வருகிறார். மாமியார் மற்றும் மாமனார் அரசு அலுவலகத்தில் வேலை பார்த்து வருவதாக தெரிகிறது.

நேற்று முன்தினம் இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். அம்ரித் டெனிஸ் சார்லினா சமயபுரம் டீச்சர்ஸ் காலனியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டில் யாரும் இல்லாத சமயம் பார்த்து மர்மநபர்கள் இவரது வீட்டின் மாடியில் உள்ள அறைக்கு சென்று அங்கிருந்த அலமாரியில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் நகையை திருடிச் சென்று விட்டனர். மாலையில் வீட்டிற்கு வந்து பார்த்த அவர் கதவு உடைக்கப்பட்டு அலமாரியில் வைத்து இருந்த நகைகள் திருடு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதைத்தொடர்ந்து அவர் சமயபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின்பேரில் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் திருச்சியில் இருந்து போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் வரை சென்று நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும் கைரேகை நிபுணர்களும் திருட்டு நடந்த வீட்டிற்கு சென்று அங்கு பதிவாகி இருந்த மர்ம நபர்களின் ரேகைகளை பதிவு செய்து ஆய்வு செய்தனர். போலீசாரின் விசாரணையில் கீழ்தளத்தில் பீரோவில் சுமார் 70 பவுன் நகைகள் இருந்ததும், அது மர்ம நபர்களின் பார்வையில் தப்பியதும் தெரியவந்தது. இது குறித்து சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த துணிகர திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.