தேவிமங்கலத்தில் அருள்மிகு செல்லியம்மன் கோயில் தேரோட்டம்

0 273
Stalin trichy visit

திருச்சி மாவட்டம்,மண்ணச்சநல்லூர் அருகே 85.சீதேவிமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ளது.அருள்மிகு செல்லியம்மன் திருக்கோயில்.இத்திருக்கோயிலில் மே.10ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.தொடர்ந்து மே 17ம் தேதி குடி அழைத்தல்,பொங்கல் மாவிளக்கு பூஜை நடைபெற்றது.அதனையடுத்து மே.18ம் தேதி அதிகாலை முள்படுகள நிகழ்வு நடைபெற்றது.வேண்டுதலை நிறைவேற்ற பக்தர்கள் முள்படு களத்தில் தங்களது நேர்த்திகடனை செலுத்தினர்.மே.18ம் தேதி அருள்மிகு செல்லியம்மன், அருள்மிகு பெரியசாமி, ஸ்ரீசூலபிடாரி சுவாமிகள் சிறப்பு பூஜைகளுக்கு திருவீதி உலாவும்,உச்சிகால பூஜையும் நடைபெற்றது.தொடர்ந்து திருத்தேரானது பக்தர்களின் பக்தி முழக்கம்,முழங்க திருத்தேர் வடம் பிடித்து இழுத்தனர்.

இந்த தேரோட்ட நிகழ்வில் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சீ.கதிரவன், மண்ணச்சநல்லூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் வி.எஸ்.பி இளங்கோவன் மற்றும் விழாக்குழுவினர்,திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.விழா ஏற்பாடுகளை 85.சீதேவிமங்கலம் கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் உள்ளிட்டோர் செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.