மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

0 357
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பூவாளூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ரூ. 5 லட்சம் மதிப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான தையல் மிஷின் மூன்று சக்கர ஸ்கூட்டி,வாகனம் செல்போன் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை எம்எல்ஏ வழங்கினார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லால்குடி எம்எல்ஏ சவுந்தரபாண்டியன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் தையல் மிஷின் 5 நபர்களுக்கும், மூன்று சக்கர ஸ்கூட்டி வாகனம் 2 நபர்களுக்கும், செல்போன் 6 நபர்களுக்கும், காதுகேளார் மெஷின் 6 நபர்களுக்கும் என மொத்தம் 19 நபர்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் லால்குடி ஊராட்சி ஒன்றிய தலைவர் ரவிச்சந்திரன்,துணைத்தலைவர் நெடுஞ்செழியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெசிந்தா, ரவிச்சந்திரன், சமூக நல அலுவலர் சந்திரமோகன்,திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் தமிழ்செல்வன், ஒன்றிய கவுன்சிலர்கள், பூவாளூர் பேரூராட்சி தலைவர் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.