மோட்டார் சைக்கிள் திருடியவர் சிறையில் அடைப்பு

0 273
Stalin trichy visit

திருச்சி விமான நிலையம் அருகிலுள்ள ஆர்விஎஸ் நகர் 2வது மெயின் ரோட்டில் வசித்து வருபவர் மாரிமுத்து(34). இவர் தனியார் வங்கியில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இவர் கடந்த 5ம் தேதி மாலை 6 மணிக்கு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு திரும்ப வந்து பார்த்தார். அப்போது தனது வாகனம் காணாமல் போனதை அறிந்து, ஏர்போர்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அதனைத் தொடர்ந்து ஏர்போர்ட் போலீசார் விசாரணை நடத்தியதில், திருட்டுப்போன வாகனத்தை திருச்சி ஏர்போர்ட் காந்தி நகர் பெரியார் தெருவைச் சேர்ந்தவர் நஜுமுதீன்(39) என்பவர் திருடிச் சென்றது தெரியவந்தது. மேற்கண்ட நபரை கைது செய்து ஏர்போர்ட் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி துறையூர் சிறையில் அடைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.