அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் சிகிச்சை பலனின்றி பலி.

0 336
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார் கோவில் ஊராட்சியில் உள்ள உத்தமர்கோவில் மேம்பாலத்தில் கடந்த 8ஆம் தேதி அடையாளம் தெரியாத வாகனம் அடையாளம் தெரியாத முதியவர் மீது மோதியதில் தலையில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

உத்தமர்கோயில் மேம்பாலம் திருச்சி சேலம் நெடுஞ்சாலையில் கடந்த 8ஆம் தேதி அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் முதியவர் மீது மோதிவிட்டு தப்பிச் சென்றது. இதில் தலையில் படுகாயம் அடைந்த முதியவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பிச்சாண்டார்கோவில் கிராம நிர்வாக அலுவலர் கொள்ளிடம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அடையாளம் முதியவரைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.