75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மின்னொளியில் மின்னும் திருச்சி மாநகராட்சி!

0 359
Stalin trichy visit

நாட்டின் 75வது சுதந்திர தினம் நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு சார்பாக ஏற்கனவே கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக சுதந்திர தின கொண்டாட்டங்களில் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டாம் எனவும் கூறியுள்ளனர்.சுதந்திர தின நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி மற்றும்‌ வானொலியில்‌ நேரடியாக ஒளி / ஒலி பரப்ப ஏற்பாடுகள்‌ செய்யப்பட்‌டுள்ளது. கூட்டத்தை தவிர்க்கும்‌ வகையில்‌, இந்தாண்டு பொதுமக்கள்‌, மாணவர்கள்‌ பள்ளிக்‌ குழந்தைகள்‌ மற்றும்‌ மூத்த குடிமக்கள்‌ விழாவினைக்‌ காண நேரில்‌ வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌.


இந்த நிலையில் திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ரயில் நிலையம் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அலுவலகம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு தற்போது மின் ஒளியில் ஒளிர்ந்து வருகிறது.

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறியhttps://chat.whatsapp.com/GHoBSZRd0IRL3LL0595Pg8

Leave A Reply

Your email address will not be published.