மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக மாணவர் கைது

0 816
Stalin trichy visit

திருச்சி திருவெறும்பூர் அருகே கல்லூரி மாணவி மர்மமான முறையில் இறந்து போனது சம்பந்தமாக டிப்ளமோ படிக்கும் மாணவரை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

திருவெறும்பூர் அருகே உள்ள நொச்சி வயல் புதூரை சேர்ந்தவர் ஆனந்தன் இவரது மகள் வித்யா லட்சுமி திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 17ஆம் தேதி உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வித்யா லட்சுமியின் வயிற்றில் விஷம் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்ததோடு
இது சம்பந்தமாக பெல் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அதன் அடிப்படையில் பெல் போலீசார் அந்த மாணவியிடம் விசாரணை மேற்கொண்டபோது தன்னை 3 பேர் வலுக்கட்டாயமாக தனக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து விட்டதாக கூறியுள்ளார். இது சம்பந்தமாக பெல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலைலட்சுமியுடன் கடைசியாக செல்போனில் பேசிய துவாக்குடி வாவுசி நகர் அன்னை தெரசா 2-வது தெருவை சேர்ந்த சுகுமாரன் மகன் கரன் (எ) கிஷோர் (19) டிப்ளமோ படித்து வருகிரான் அவனை பிடித்து விசாரணை செய்து வந்தனர்.

இந்த நிலையில் அந்த மாணவி சிகிச்சை பலன் இல்லாமல் 22 தேதி திருச்சி அரசு மருத்துவமனையில் பரிதாபமாக இருந்தார்.

அதன் அடிப்படையில் வித்யா லட்சுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது உடனே ஒப்படைக்க முடியவில்லை காரணம் மச்சி வயல் புதூரில் திருவிழா நடந்து காரணத்தினால் வித்யாலட்சுமியின் உடலை மறுநாள் பாடியை வாங்கிக் கொள்ளவதாகபெற்றோரும் உறவினரும் போலீசாரிடம் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று வித்யாலட்சுமி மரணத்திற்கு காரணமான மூன்று பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் குடும்பத்திற்கு 25 லட்ச ரூபாய் நிவாரணம் ஒருவருக்கு அரசு வேலை மாணவி பற்றி அவதூறாக பேசிய நவல்பட்டு இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் மேலும் அப்பொழுது போலீசாரின் தடியடி நடத்தினர் பதிலுக்கு போராட்டக்காரர்களும் கற்களைக் கொண்டு தாக்கியுள்ளனர்.

இந்த நிலையில் இது சம்பந்தமாக தொடர்ந்து போராட்டம் நடந்து வந்த நிலையில் அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆதரவு தெரிவித்ததோடு திருச்சி கலெக்டர் சிவராசு வை நேற்று இரவு போராட்டக்காரர்கள் சென்று சந்தித்து பேசியதாகவும் அதற்கு சிவராசு வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தால் அதற்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அதன்பிறகு திருச்சி எஸ்பி யை நேரில் சந்தித்து பேசிய பொழுது அந்த வழக்கை கொலை வழக்காக மாற்ற முடியாது என திட்டவட்டமாக கூறியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு திருவெறும்பூர் போலீசார் வன்முறையை தூண்டும் வகையில் செயல்பட்ட 7 பேரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று காலை 10 மணி அளவில் வித்யா லட்சுமியின் உடலை வாங்கிக் கொள்வதாக கிராமத்தினர் முடிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் போலீசார் அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.