வைகாசி தேரோட்டத்திற்கு சாலை அமைத்து தருமாறு இந்து முன்னணி இயக்கம் சார்பில் மனு

0 405
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் உறையூர் கடைவீதியில் சோழர் காலத்து பழமை வாய்ந்த அருள்மிகு காந்திமதி அம்மை உடனுறை பஞ்சவர்ண சுவாமி திருக்கோவில் உள்ளது.இக்கோவிலில் வைகாசி விசாக பெருவிழா (தேர்த் திருவிழா) ஜூன் 2.6.2022 முதல் 14.6.2022 வரை நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் (திருத்தேர் வடம் பிடித்தல்) 11.6.2002 அன்று காலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் நடைபெற உள்ளது. அது சமயம் தேர் ஊர்வலம் ஆனது உறையூரில் முக்கிய வீதிகளில் வலம் வருவது வழக்கம். தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பாதாள சாக்கடை பணி நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. ஆதலால் தேரோடும் வீதிகள் அனைத்து சாலைகளும் குண்டும் குழியுமாக மிக மோசமான நிலையில் உள்ளது இது தேரோட்டம் நடத்த இயலாத நிலையில் உள்ளது. அதனால் தேரோடும் சாலைகளை நிரந்தரமாக மிக விரைவில் சீரமைத்து தருமாறு இந்து முன்னணி இயக்கத்தின் சார்பாக கோ அபிஷேகபுரம் உதவி ஆணையரிடம் மனு வழங்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.