திருச்சி மாவட்டம், லால்குடி அருகே செங்கல் சூளை தொழிலா ளியை முத்தரையர் சங்க தலைவர் தாக்கியதில், அவமானமடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
திருச்சி மாவட்டம்,லால்குடி அருகே நன்னிமங்கலம் பகுதியைச் சேர்ந்த ராமர் மகன் ராஜிவ்காந்தி (45). ராஜீவ் காந்தி பேரரசர் முத்தரையர் பேரவை, மாநில தலைவராக பதவி வகிக்கிறார். லால்குடி அருகே கீழன்பில் பகுதியில் ராஜிவ்காந்திக்கு சொந்தமான செங்கல் சூளை உள்ளது.
இந்த செங்கல் சூளையில் அரியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகேந்திரன்(51). மற்றும
இவரது மகன்கள் பிரசாத் , சக்திவேல் என இரண்டு மகன்கள் என மூவரும் வேலை செய்து வருகின்றனர்.
ராஜிவ்காந்தியிடம் நாகேந்திரன் பணம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நாகேந்திரன் உடல்நிலை சரியில்லாத காரணத்தால், கடந்த சில நாட்களாக செங்கல் சூளைக்கு வேலைக்கு செல்லவில்லை.
இதனால், நாகேந்திரனிடம் ஏன் வேலைக்கு வர வில்லை என ராஜிவ்காந்தி கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதனால், ஆத்திரமடைந்த ராஜிவ்காந்தி நாகேந்திரன் தாக்கினார்.
இதை தட்டிக் கேட்ட அவரது மகன் பிரசாந்த்தையும் தாக்கினார்.
இதனால், அவமானமடைந்த நாகேந்திரன் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை மீட்டு லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று, பின்னர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி நாகேந்திரன் உயிரிழந்தார்.
புகாரின் பேரில் லால்குடி போலீசார் வழக்குபதிவு செய்து நாகேந்திரன் தற்கொ
லைக்கு காரணமான ராஜிவ்காந்தியை வலைவீசி தேடி வருகின்றனர்.