ச.கண்ணனூர் பேரூராட்சியில் வாகன வரி வசூல் டெண்டரில் முறைகேடு  :  குற்றம்சாட்டிய ஒப்பந்தபுள்ளி கோரியவரை தாக்க முயன்ற திமுகவினர்

0 361
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் சமயபுரம் கண்ணனூர் பேரூராட்சியில் வாகன வரி வசூல் செய்யும் டெண்டரில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம் சாட்டிய ஒப்பந்தப்புள்ளி கோரிய நபரை திமுகவினர் தாக்க முயன்றனர் .
இதனை வீடியோ எடுத்த செய்தியாளர் களையும் திமுகவினர் விரட்டியதால் ஏலம் நடக்கும் இடத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனையடுத்து ஏலம் ரத்து செய்யப்பட்டு மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

சமயபுரம் கண்ணனூர் பேரூராட்சி பகுதியில் உள்ளது சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் .இக்கோயிலுக்கு செவ்வாய் ,வெள்ளி, ஞாயிறு ஆகிய கிழமைகள் மற்றும் அமாவாசை பவுர்ணமி மற்றும் விசேஷ காலங்களில் அதிகளவில் திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது வெளிமாவட்ட மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் அதிக அளவில் வந்து செல்வதால் பேரூராட்சி எல்லைக்குள் நுழையும் வாகனங்களுக்கு வாகன வரி வசூல் செய்யும் டெண்டர் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் நடைபெறும்.

கடந்த ஆண்டு இந்த ஏலம் ரூ. ஒரு கோடியே 71 லட்சத்திற்கு விடப்பட்டது.
இந்த ஆண்டிற்கான ஒப்பந்த புள்ளி பங்கேற்கும் ஒப்பந்த தாரர்கள் பேரூராட்சி அலுவலகத்தில் வைத்திருக்கும் ஒப்பந்த புள்ளி பெட்டியில் 30 ம் தேதி ( நேற்று ) மாலை 3 மணிக்குள் செலுத்துமாறு பேரூராட்சி சார்பில் அறிவுறுத்தியுள்ளது. ஆனால் ஒப்பந்தப்புள்ளி டெண்டர் பெட்டி பூட்டி சீல் வைக்கப் படாமல் இன்று 31 ம் தேதி பேரூராட்சி அலுவலக கூட்டரங்கில் வாகன வரி வசூல் ஏலம் நடைபெற்றது.

அப்போது பங்கேற்ற ஒப்பந்தப்புள்ளி கோரிய டெண்டர் முறைகேடாக நடந்து உள்ளது எனவும் டெண்டர் பெட்டியினை பூட்டி சீல் வைக்காமல் பேரூராட்சி செயல் அலுவலர் தன்னிச்சையாக செயல்பட்டு உள்ளார், எனவும் அதற்கான ஆதாரங்களை பேரூராட்சி அலுவலகத்தில் பொருத்தி உள்ள கண்காணிப்பு கேமராவில் இடம்பெற்றுள்ளது என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார் .

அப்போது அங்கு வந்திருந்த திமுக சமயபுரம் நகர செயலாளர் துரை ராஜசேகரன் அவரது ஆதரவாளர் ஆட்டோ ஓட்டுநர் மாணிக்கம் உள்ளிட்டோர் அவரை தாக்க முயன்றனர்.இந்த சம்பவங்களை வீடியோ எடுத்த செய்தியாளர்களை வீடியோ எடுக்க கூடாது என மிரட்டினர்.இதனால் ஏலம் எடுக்கும் இடத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதால் ஏலத்தினை தேதி குறிப்பிடாமல் பேரூராட்சி செயல் அலுவலர் சந்திரகுமார் தற்காலிகமாக ஏலத்தினை நிறுத்தி வைத்தார்.

Leave A Reply

Your email address will not be published.