இளைஞர்களின் நலனுக்காவும், தி.மு.க. வளர்ச்சிக்காவும் அமைச்சர் பொறுப்பினை உதயநிதி ஸ்டாலின் தட்டாமல் ஏற்றுக் கொள்ள வேண்டும்: திருச்சி மாவட்ட செயற்குழுவில் தீர்மானம்
திருச்சியில் உள்ள கழக முதன்மைச் செயலாளர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட செயற்குழு கூட்டத்தில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி உரையாற்றினார் நிகழ்ச்சியில் மேயர் அன்பழகன் எம்எல்ஏ சௌந்தரபாண்டியன், முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி அவைத் தலைவர் தர்மலிங்கம் மாவட்ட துணை செயலாளர்கள் முத்துச்செல்வம் விஜயா ஜெயராஜ் , துரை கந்தசாமி வழக்கறிஞர் ஓம் பிரகாஷ் செயற்குழு உறுப்பினர் செவந்தி லிங்கம், இளைஞர் அணி அமைப்பாளர் ஆனந்த், கோல்கேட் சுப்பிரமணி பகுதி செயலாளர்கள் கண்ணன் காஜாமலை விஜி,இளங்கோ ராம்குமார் மோகன்தாஸ் , மற்றும் கழக நிர்வாகிகள் கருப்பையா துரைராஜ் கதிர்வேல் தமிழ்ச்செல்வன் செல்வராஜ் கோட்டத் தலைவர்கள் விஜயலட்சுமி துர்காதேவி தொமுச குணசேகர் செங்குறிச்சி கருப்பையா, வழக்கறிஞர் கவியரசன், அந்தோணி ராஜேந்திரன் சிங்காரம்உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
தீர்மானம்-1
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 99 வது பிறந்தநாள் விழாவினை நமது மத்திய மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றிய, நகர, பகுதி, பேருர், கிளைக்கழகம், மற்றும் வட்ட கழகங்களில் டாக்டர். கலைஞர் அவர்களின் திருவுருவ படத்தினை வைத்து மாலை அணிவித்து கழக கொடியேற்றி இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி மிக சிறப்பாக கொண்டாடுவது என தீர்மானிக்கப்படுகின்றது.
தீர்மானம்-2
தமிழக மக்களின் நன்மதிப்பை பெற்று தேர்தல் வாக்குறுதிகளை பெருமளவில் நிறைவேற்றி ஓராண்டு கால ஆட்சியினை நிறைவு செய்த தமிழக அரசுக்கும், தமிழக முதல்வர் மாண்புமிகு. தளபதி அவர்களுக்கும் இக்கூட்டம் தனது நெஞ்சார்ந்த நன்றியினையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம்-3
தி.மு.கழக இளைஞர் அணி செயலாளரும், தமிழகம் முழுவதும் சுற்று பயணம் செய்து தேர்தல் பிராச்சாரம் மேற்கொண்டு கழக ஆட்சி அமைந்திட உழைத்து தமிழக மக்களின் பேரன்பை பெற்றவருமான இளஞ்சூரியன் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கிட தமிழக முதல்வர் அவர்களை இக்கூட்டம் வலியுறுத்தி கேட்டுக் கொள்கின்றது. அமைச்சர் பொறுப்பு தற்சமயம் தனக்கு வேண்டாம் என்று அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார், இருப்பினும் தமிழக இளைஞர்களின் நலனுக்காவும், தி.மு.கழக வளர்ச்சிக்காகவும், அமைச்சர் பொறுப்பினை தட்டாமல் ஏற்றுக் கொள்ள வேண்டுமென இக்கூட்டம் மாண்புமிகு உதயநிதி அவர்களை கேட்டுக் கொள்கின்றது.