துணை வட்டாட்சியருக்கு கையூட்டு பெற்று கொடுத்த ஓட்டுநருக்கு 3 வருட சிறை – ரூ.10 ஆயிரம் அபராதம் விதிப்பு

0 363
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் மேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் மகன் முத்து என்பவருக்கு அவரது சொந்த கிராமத்தில் நிலம் உள்ளது. அந்த நிலமானது கூட்டு பட்டாவில் தனது தனது சகோதரர்கள் பெயரில் இருந்தது. கூட்டு பட்டாவில் இருந்த தனது சகோதரர்களின் கூட்டு பட்டாவில் இருந்த தனது சகோதரர்களின் பெயர்களை நீக்குவதற்காக மணப்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தை அணுகியபோது அப்போதைய மணப்பாறை வட்டாட்சியர் அலுவலக மண்டல துணை வட்டாட்சியராக இருந்த திரு. உபகாரம் என்பவர் 10,000 கையூட்டு கேட்டது தொடர்பாக திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறையில் திரு.முத்து அளித்த புகாரின் பேரில், திரு.உபகாரம் முத்துவிடமிருந்துதனது ஓட்டுனர் ஆறுமுகம் என்பவரின் மூலம் 10,000 கையூட்டு பெற்ற போது கையும் களவுமாக பிடிபட்டார். இவர்கள் இருவர் மீதான வழக்கு நீதிமன்ற நிலுவையில் இருந்தபோது துணை வட்டாட்சியர் உபகாரம் கடந்த 2013ம் ஆண்டு இறந்துவிட்டார். தற்போது வழக்கு விசாரணை முடிவுற்று, குற்றம் நிரூபணமாகி, உபகாரம் கையூட்டு வாங்குவதற்கு உதவியாக இருந்த ஓட்டுநர் ஆறுமுகத்திற்கு 3 வருட சிறை தண்டனையும் 10 ஆயிரம் அபராதமும் விதித்து ஊழல் தடுப்பு தனி நீதிமன்ற நீதிபதி திரு.கார்த்திகேயன் அவர்கள் இன்று 31.5.2022 தீர்ப்பளித்தார்.

Leave A Reply

Your email address will not be published.