சேவை அமைப்புகளின் முன்னாள் தலைவர் மறைந்த சேகரன் முதலாமாண்டு நினைவு அஞ்சலி
அனைத்து சேவை அமைப்புகளின் தலைவராக திகழ்ந்த காலம் சென்ற தவத்திரு M. சேகரன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி இன்று காலை 11 மணி அளவில், திருச்சி பாலக்கரை, RKR ஹாலில் நடை பெற்றது.
அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் மறைந்த சேகரன் அவர்களின் மைத்துனர் திரு. அழகேசன் குடும்பத்தின் சார்பில் கலந்து கொண்டார்.
சேவை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், நிர்வாகிகள் A. ராஜன், RK ராஜா, ஃபாத்திமா கண்ணன், எழில் ஏழுமலை, தண்ணீர் சதிஷ், கோவிந்தராஜ், காமகோடிசுந்தர், பால் குணா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அன்னாரின் சிறப்புகளை நினைவு கூர்ந்து, செயல்பாடுகளை எடுத்து கூறி, சமூக சேவை பணிகள் தொடர உறுதிமொழி எடுத்து கொண்டார்.