நவல்பட்டியில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க அலுவலக கட்டடத்தினை அமைச்சர் அன்பில் மகேஸ் திறந்து வைத்து பயனாளிகளுக்கு கடனுதவிகளை வழங்கினார்
திருச்சி மாவட்டம், நவல்பட்டில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்திற்கான புதிய கட்டடத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்து பயனாளிகளுக்கு கடனுதவிகளை வழங்கினார். இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.என்.சேகரன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ஜெயராமன், களஅலுவலர் விமலா, கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் ஹபிபுல்லா, செயலாளர் இளங்கோவன் மற்றும் பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
