ரூ.5.50 லட்சம் மதிப்பில் புதிய சமையல் கூடம் கட்டுவதற்கான பூமிபூஜை: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் உள்ள திருநகர் 7வது வார்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய மாதிரி தொடக்கப்பள்ளியில் புதிய சமையல் கூடம் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
திருநகர் ஊராட்சி ஒன்றிய மாதிரி தொடக்கப் பள்ளியில் புதிய சமையல் கூடம் கட்டுவதற்கான எம்எல்ஏ பொது நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் மதிப்பில் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பூமிபூஜை நடைப்பெற்றது. இந்த பூமிபூஜையை மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ கதிரவன் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
இந்நிகழ்வில் பள்ளி தலைமையாசிரியர் திருமதி கீதா,பேரூராட்சி தலைவர்,திமுக நிர்வாகிகள் பேரூராட்சி அலுவலக பணியாளர்கள் மற்றும் பலர் உடனிருந்தனர்.