முகமது நபி அவதூறு பேச்சை திசை திருப்பவே ஆதீனத்தை கையில் எடுத்துள்ளார் அண்ணாமலை – : சி.பி.ஐ. தேசிய செயலாளர் டி.ராஜா

0 230
Stalin trichy visit

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் வளாகத்தில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்துகொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார் :

ஆதீனங்கள் மீது கை வைத்துப் பாருங்கள் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியது குறித்த கேள்விக்கு ?

பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரை ஏதாவது ஒரு பிரச்சினையை கிளப்பி விட்டு அதன் வாயிலாக காலூன்ற வேண்டும் என்று திட்டமிடுவார்கள்.

கோவில்கள் மக்கள் கட்டியது – எனவே ஆதினங்கள் தாமாக முன் வந்து வரவு செலவு கன்னக்கை கொடுக்க வேண்டும் – சிதம்பரம் என்றாலும் சரி மதுரை என்றாலும் சரி கோவில்களை கல் மன்னை சுமந்து கட்டியது பொதுமக்கள், எனவே பொதுமக்களுக்கு கோவில்களில் உள்ள வரவு செலவு என்ன என்பதை தெரிந்து கொள்ள எல்லா உரிமையும் உண்டு.

சாதரன மக்கள் தான் கோவில்களை கட்டினார்கள் என்பதை என்ன பார்க்க வேண்டும்.

ஜாதி வேறுபாடு :

சாதியின் பேரால் ஒடுக்குமுறை இருக்ககூடாது – சமூக நீதி,பொருளாதார நீதி ஏழை எளிய மக்களுக்கும் சிறுபான்மையின மக்களுக்கும் கிடைக்க வேண்டும்.

வாரனாசியில் இன்று என்ன நடக்கிறது என்பதை பார்க்க முடிகிறது.

சாதி மதங்கள் கடந்து புதிய சமுதாயம் அமைய வேண்டும் என்று கொள்கை ரீதியாக போராடுவதே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நோக்கம்.

இ.கம்யூ கட்சியின் அகில இந்திய மாநாடு, வரும் அக்டோபர் மாதம் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடக்கிறது. இம்மாநாடு, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநாடாக இருக்கும்.

தற்போதைய நிலையில், இந்திய அரசியல் பெரும் சவால்களை எதிர்கொண்டிருக்கிறது. பாஜக- ஆர்எஸ்எஸ் கூட்டு, இந்திய அரசியலமைப்பு சட்டத்தை திருத்த முயல்கிறது.

ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படுகிறது. சாதிய, மத மோதல்களை தூண்டி வருகிறது.

இஸ்லாமிய இறைத்தூதர் குறித்து பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் நீக்கப்பட்டுள்ளார். ஆனால், பாஜக, ஆர்எஸ்எஸ் போன்றவை இதுபோன்ற கருத்துகளை தொடர்ந்து கூறி வருகின்றன.

இவர்களின் செயல்பாடுகளால் இந்தியா மதசார்பற்ற, ஜனநாயக நாடாக நீடிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து உள்ளது.

முன்னெப்போதும் இல்லாத வகையில், இந்திய பொருளாதாரம் நிலைகுலைந்து போயிருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சி உட்பட அனைத்துக் கட்சிகளும் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறோம்.

இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில், மதசார்பற்ற ஜனநாயகவாதியை தேர்ந்தெடுக்க வேண்டும். இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில், இந்திய ஜனநாயகத்தை, அரசியலமைப்பை, மதசார்பற்ற தன்மையை கொண்ட வேட்பாளரை முன்நிறுத்த, அனைத்து மதசார்பற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

பாஜக தவிர்த்த தேசியக் கட்சிகள், மாநிலக் கட்சிகள் ஒண்றிணையும் போது, பாஜக ஒன்றும் பெரிய கட்சி அல்ல.

Leave A Reply

Your email address will not be published.