திருச்சி BHEL நடைபெற உள்ள சங்க அங்கீகார தேர்தல்: மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் வாக்குகள் சேகரித்தார்

0 247
Stalin trichy visit

திருச்சி BHEL நடைபெற உள்ள சங்க அங்கீகார தேர்தலின் 2022 CITU பிரச்சார கூட்டம் நடைபெற்றது இதில் சு.வெங்கடேசன் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் EAST GATE வாக்குகள் சேகரித்தார் பேசினார்.

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பெல் நிறுவனம் அங்கிகார தேர்தல் 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில் சிஐடியு தொழிற் சங்கத்திற்கு ஆதரவாக மதுரை எம்பி வெங்கடேசன் தொழிலாளர்களிடம் வாயிற்கூட்டம் மூலம் வாக்கு சேகரித்தார்.

திருவெறும்பூர் அருகே உள்ள பெல் நிறுவனத்தில் தொழிற்சங்கங்களின் அங்கீகார தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெறுகிறது. அதற்காக தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களிடம் வாக்கு சேகரிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் பெல் கிழக்கு நுலைவாயில் முன்பு நடந்த கூட்டத்திற்கு சங்க பொதுச் செயலாளர் பிரபு தலைமை வைத்தார். அதில் சிறப்பு விருந்தினராக தொழிற்சங்க பேரவை தலைவரும் மதுரை மாவட்ட எம்பியுமான வெங்கடேசன் கலந்து கொண்டு பேசியதாவது:

பெல் நிறுவனத்தில் 42 ஆண்டுகளாக சிஐடியு சங்கம் தொழிலாளர்களுக்காக தொழிற்சாலைக்காக செய்துள்ள பணிகள் பற்றி செயலாளர் பேசியதை நினைவு கூர்ந்தார். மேலும் வாக்குகேட்டு அங்கீகார தேர்தல் என்பதைவிட பெல் போன்ற பொதுத்துறை நிறுவனத்தை தொடர்ந்து பாதுகாக்க வேண்டும் என்றும் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு கர்ண கொடூரமாக தற்போது நடைபெற்று வருவதாகவும் சலுகைகளுக்கும் உரிமைகளுக்காக போராடும் சங்கமாக சிஐடியு சங்கம் உள்ளது.

கண் இமைக்கும் நேரத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களை ஒன்றிய அரசு சூரையாடி வருவதாகவும் அதனை எதிர்த்து நாடாளுமன்றத்தில் ஒலிக்கும் குரல் சின்னதாக உள்ளதுகடந்த ஒரு மாதத்தில் ஒன்றிய அரசின் அமைச்சர்கள் பலருக்கு கடிதம் எழுதி உள்ளதாகவும் ரயில்வே விளையாட்டு மைதானத்தை பாதுகாக்க வேண்டும், பொதுத்துறை பள்ளிகளை விற்க கூடாது, மூட கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்து 15க்கும் மேற்பட்ட கடிதங்கள் எழுதி உள்ளதாகவும் முன்னோர்கள் இதையெல்லாம் நமக்கு பெற்று கொடுத்துள்ளார்கள்.

தற்பொழுது முதல் தனியார் ரயில் கோவையில் இருந்து சீரடி வரை அடுத்த வாரம் செயல்பட உள்ளதாகவும் இன்றைய இந்தியாவில் மிக மோசமாக பொதுத்துறை நிறுவனங்கள் அழிந்து வருகிறது. 110 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு இருந்த 44 சட்டத்தை ஒன்றரை மணி நேரத்தில் 4 சட்டமாக மாற்றிவிட்டனர். இதனால் இனி 8 மணி நேரம் வேலை என்பது நடைமுறை படுத்த முடியாது, அதை யாரும் கேட்கவும் இல்லை.

நாடாளுமன்றத்தில் ஒரு மசோதா தாக்கல் செய்ய வேண்டும் என்றால் 7 நாட்களுக்கு முன்பு தெரிவிக்க வேண்டும் ஆனால் அவர்கள் ஏழு மணி நேரத்திற்கு முன்பு கூட தெரிவிப்பதில்லை இரவு தான் மசோதா தாக்கல் பற்றி தகவல் வருவதாகவும், அம்பானிக்கு ஹெலிபேட் தேவை என்பதற்காக (என் எப்டிர நேஷனல் பிலிம் ரீல் அதாவது சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை கார்ப்பரேட் ஆகிவிட்டதாகவும் மிகப்பெரிய ஆபத்தின் விளிம்பில் பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் உள்ளார்கள்.

நெய்வேலியில் கடந்த மாதம் 136 பேர் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளார்கள் அதில் ஒரே ஒரு தமிழர்தான் இவற்றை எல்லாம் கலைவதற்கு ஒவ்வொருவருக்கும் அரசியல் விழிப்புணர்வு வேண்டும். வேளாண் மசோதா விவாதம் இல்லாமல் நிறைவேற்றப்பட்டதாகவும் அதற்கு அந்த துறையை சேர்ந்த அமைச்சர் கபூர் எதிர்ப்பு எதிர்த்துப் பேசியதையும் மீறி நிறைவேற்றப்பட்டதாகவும் விவசாயிகளின் விழிப்புணர்வுடன் போராடியதால் தீர்வு காணப்பட்டது. இத்தகைய அரசியல் விழிப்புணர்வு மக்களுக்கும் வேண்டும் என்றார்.

நாட்டிலுள்ள 44 படைகலன் பாதுகாப்பு தொழிற்சாலைகளை தனியார்மயம் ஆகிவிட்டதாகவும் ஒன்றிய அரசிற்கு தேசபக்தியும் இல்லை தெய்வ பக்தியும் இல்லை கார்ப்பரேட் பத்தி தான் உள்ளது. தற்பொழுது நடைபெறும் பெல் தேர்தல் சலுகைகள் சம்பந்தப்பட்ட தேர்தல் இல்லை என்றும் வாழ்வு சம்பந்தப்பட்டது. தொழிற்சங்கங்கள் சம்பந்தப் பட்டது மட்டுமல்ல தொழிற்சாலை சம்பந்தப்பட்டது. ஒவ்வொரு தொழிலாளர்களும் தொழிற்சாலையின் கதவுகளாக இருக்க வேண்டும் அந்நியர்கள் யாரும் உள்ளே நுழைய விடக்கூடாது. ஒவ்வொருநாளும் பொதுத்துறை நிறுங்களுக்கு சாவுமணி அடிக்க படுகிறது. இதனை கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.

பெல் நிறுவனத்தை காப்பாற்ற அரசியல் சமரசமில்லாத குரல் கொடுக்கிறார்கள் என்றால் அது சிஐடியூ தொழிற்சங்கம் என்றும் அந்த தொழில் சங்கத்திற்கு நீங்கள் எல்லாரும் வாக்களித்து முதன்மை சங்கமாக கொண்டுவரவேண்டும். இந்தியாவில் உள்ள 90% பொதுத்துறை நிறுவனங்கள் கொரொனா காலத்திலும் லாபத்தில் தான் இயங்கி வருகின்றன துரோகிகளிடமிருந்து பாதுகாத்துகொள்ள நல்ல அரசியல் விழிப்புணர்வு வேண்டும் என்று கூறினார்.

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் வெங்கடேசன் கூறியதாவது.

பெல் தொழிற்சாலை தொழிற்சங்க பேச்சுவார்த்தை அங்கீகாரதேர்தல் வரும் 23-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தியா முழுவதும் 18 பெல் நிறுவனங்களும் தமிழகத்தில் மூன்று நிறுவனங்களும் உள்ளது. திருச்சி பெல் நிறுவனத்தில் உள்ள சிஐடி தொழிற்சங்கத் இருக்கு அங்கீகார தேர்தலில் வாக்களித்து முதன்மை சங்கமாக தேர்வு செய்ய வேண்டும்என்று தொழிலாளர்களும் வாக்கு கேட்டு வந்துள்ளேன். இந்தியாவில் உள்ளகார்ப்பரேட் தொழிற்சாலைகள் எல்லாம் பலிகடா ஆக்கப்பட்டு வரும் சூழ்நிலையில் பொதுத்துறையை பாதுகாப்பது தேசத்தைப் பாதுகாப்பது போரின் மிகமுக்கியமான வடிவம்.

எந்தவித அரசியல் சமரசம் இல்லாமல் போராட கூடிய அமைப்பாக உள்ள சிஐடியு தொழிற்சங்கத்திற்கு வாக்களித்து முதன்மை தங்கமாக ஆக்க வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்வதாக கூறினார், தேசியக் கல்விக் கொள்கை என்பது இந்திய கல்விக் கொள்கையின் மறுமலர்ச்சியை முடிவுக்கு கொண்டு வரும் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் திட்டமிட்ட வடிவமாகும் அதனால் தேசிய கல்விக்கொள்கை முறியடிக்க வேண்டும் படவேண்டும். தமிழகத்தில் எந்த காரணத்திற்காக அமல்படுத்தக் கூடாது தமிழகத்திற்கு என தனிக் கல்வி கொள்கை அதற்கான ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

கல்விப்பணியில் மற்ற பகுதிகளை விட நாம் முன்னேறியவர்கள். அதில் சமூக சீர்திருத்தம் பெண் விடுதலைஎதிர் கொள்கின்ற மன திடத்துடன் கூடிய மாணவர்களை உருவாக்க வேண்டும். இந்தியா முழுவதும் காவல்துறைக்கு ஒரே சீருடை என்பது இந்தியா முழுவதும் பன்மைத்துவத்தை எல்லா வகையிலும் மறித்து ஒற்றை வடிவமாகஇதில் காரணங்களுக்காக செயல்படுவதை முறியடிக்கப்பட வேண்டும். பெட்ரோல் டீசல் விலை உயர்வை எதிர்த்து சென்னையில் அண்ணாமலை போராட்டம் நடத்துவது மிகப் பெரிய காமெடி என்றார்.

Leave A Reply

Your email address will not be published.