தொட்டியம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் புனிதராணியின் பதவியை பறிக்க முயற்சி
அரசியல் வட்டாரத்தில் மீண்டும் தலையெடுக்கும் கூட்டணி கட்சி புறக்கணிப்பு, அதற்கு உதாரணமாக திருச்சி மாவட்டம் தொட்டியம் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றிய குழு தலைவராக திமுகாவை சோ்ந்த புனிதராணி என்பவா் நியமிக்கப்பட்டுள்ளார். இவா் தாழ்த்தபட்ட சமூகத்தை சோ்ந்தவா் என்பதற்காகவே, இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினா் காடுவெட்டி தியாகராஜனின் ஆதரவாளா்களான மற்ற உறுப்பினா்கள் ஒன்றிய குழு தவைருக்கு எதிராக போர் கொடி தூக்கியுள்ளனா்.
தற்போது ஒன்றிய அலுவலகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க. காங்கிரஸ் உள்பட 19- ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் தற்போது ஒன்றிய குழு தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த புனிதராணி பதவி வகித்து வருகின்றார். ஒன்றியக்குழு துணைத் தலைவராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சத்தியமூர்த்தி உள்ளார்.
இந்நிலையில் ஒன்றியக்குழு தலைவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து மாவட்ட கலெக்டரிடம் ஒன்றிய கவுன்சிலர்கள் புகார் மனு அளித்தனர். ஒன்றிய கவுன்சிலர்கள் புகார் மனு காரணமாக முசிறி கோட்டாச்சித் தலைவர் மாதவன் தலைமையில் ஒன்றிய ஆணையர்கள் ஞானமணி, மற்றும் பெரியசாமி, ஆகியோர் முன்னிலையில் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது.
அப்போது ஒன்றிய குழு தலைவர் பதவியில் இருந்து புனிதராணி தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி 16 -ஒன்றிய குழு உறுப்பினர்கள் தீர்மா னத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். ஒன்றிய குழு தலைவர் புனிதராணி உள்பட 3- உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதுகுறித்து முசிறி கோட்டாட்சியர் மாதவன் கூறும்போது, ஒன்றி யக்குழுத் தலைவர் மீது ஒன்றிய கவுன்சிலர்கள் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். அதற்கு ஆதரவாக 16 பேர் வாக்களித்தனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வாயி லாக தமிழக அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொ ள்ளப்படும் என்று கூறியிந்தார்.
இந்நிலையில் இந்த பிரச்சனைக்குறித்து புனிதராணி விடுதலை சிறுத்தை கட்சிகளின் தலைவர் தொல். திருமாவளவனுக்கு கொண்டு செல்ல, அவரும் அதை முதல்வரின் காதிற்கு கொண்டு சென்றுள்ளார். இந்நிலையில், அங்கிருந்து அமைச்சர் கே.என்.நேருவிற்கு வந்தவுடன், அமைச்சரும் காடுவெட்டி தியாகராஜனிடம் கடிந்துகொண்டுள்ளார். இதனால் கடந்த சில நாட்களாகவே புனிதராணியை எப்படியும் ஒன்றிய குழு தலைவர் பதவியில் இருந்து நீக்கிவிட வேண்டும் என்று தொடர்ந்து முயற்சி நடப்பதாக கூறப்படுகிறது.
இவா்களின் இந்த அரசியல் புனிதராணியின் ஒன்றிய குழு தலைவர் பதவியை பறிக்க போவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.