சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

0 292
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள வினோபாஜி பள்ளியில் சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா இன்று நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம் மனோஜிபட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் டாக்டர் அம்பேத்கார் நற்பணி மன்றம் கலைபுலி சிலம்பாட்ட கழகம் இணைந்து மாபெரும் மண்டல அளவிலான சிலம்ப போட்டி நேற்று தஞ்சையில் நடைபெற்றது. இப்போட்டியில் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கு பெற்றனர்.இதில் லால்குடியைச் சேர்ந்த வர்மம் போர்க்களப் பயிற்சி பள்ளியிலிருந்து தலைமை ஆசான் ப.கணநாதன் முன்னிலையில் 37 மாணவர்கள் பங்கு பெற்றனர்.அதில் 23 மாணவர்கள் முதல் பரிசும், 8 மாணவர்கள் இரண்டாம் பரிசும், 6 மாணவர்கள் மூன்றாம் பரிசையும், தட்டிச் சென்றனர்.

மாணவர்களை பாராட்டி பரிசளிப்பு விழா இன்று மாலை வினோபாஜி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.இவ் விழாவில் பெற்றோர்கள் முன்னிலையில் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர்.

Leave A Reply

Your email address will not be published.