திராவிட கழகத்தின் மகளிர் அணி மற்றும் மகளிர் பாசறை அணியின் கலந்துரையாடல் நிகழ்ச்சி…
திருச்சியில் திராவிட கழகத்தின் மகளிர் அணி மற்றும் மகளிர் பாசறை அணியின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி கலந்து கொண்டார்.
இதில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கி.வீரமணி :
தமிழகம் முழுவதும் திராவிட கழக மகளிரணி கலந்துரையாடல் நிகழ்ச்சி திருச்சியில் ஏற்பாடு செய்யப்பட்ட நடைபெற்று வருகிறது. சாதிரீதியாக பேதங்கள் இருப்பது தாண்டி பிறவி ரீதியாக ஆண் வேறு பெண் வேறு என்கிற பேதங்கள் இருக்கக் கூடாது என்பதனை தந்தை பெரியார் வலியுறுத்தினார். பெண்களுக்கு சொத்துரிமை பேச்சுரிமை உத்தியோக உரிமை என்கிற எல்லா உரிமையும் வழங்கப்பட வேண்டும் என்று செங்கல்பட்டு மாநாட்டில் பெரியார் கூறினார்.
பெண்களுக்கு சொத்துரிமை உண்டு என்கிற அம்பேத்கரின் கருத்துகளை ஏற்க மறுத்தனர்.யூபிஏ அரசாங்கத்தோடு திமுக கூட்டணியில் இருந்தபோது பெண்களுக்கு சொத்துரிமை உண்டு என்கிற சட்டம் நிறைவேறியது – உள்ளாட்சித் துறையில் 50 சதவீதம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு என்பதனை தமிழக முதல்வர் திராவிட மாடல் ஆட்சி நடத்துபவர் தான் கொண்டுவந்தார். பெண்கள் வீட்டிற்குள் மட்டுமே இருக்க வேண்டும் என்பது ஆர்.எஸ் எஸ் கொள்கை – 1989ல் கலைஞர் பெண்களுக்கு சொத்துரிமை உண்டு என்பதனை நடந்து காட்டினார்.
இங்கு நாம் சட்டம் கொண்டு வந்த பின்னர்தான் அது மத்தியில் சட்டமாக கொண்டு வரப்பட்டது – எனவே இன்னும் நெடுந்தூரம் நான் செல்ல வேண்டும். திராவிட கழகத்தின் மகளிர் அணி மற்றும் மகளிர் பாசறை பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது. திராவிட மாடல் ஆட்சி என்றால் என்ன என்பதை பட்ஜெட்டில் அறிவித்துள்ளார் – அது எதிர்க்கட்சிகளுக்கு தெரியவில்லை. அனைவருக்கு அனைத்தும் – பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும் என்பதுதான் திராவிட மாடல் அதற்கு நேர் எதிரான கருத்துகளை கொண்டவர்கள் ஆர்எஸ்எஸ்.
பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு என்பது மோடியின் பத்தாண்டு கால ஆட்சியில் ஊறுகாய் ஜாடியில் ஓடிக்கொண்டிருக்கிறது – ஆனால் இங்கு கேட்காமலேயே 50% கொடுத்துள்ளனர். அனைவருக்கும் கல்வி அனைவருக்கும் உத்தியோகம் என்று சொல்வது திராவிட மாடல் – இதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் மக்கள் பார்த்து கொள்வார்கள். உள்ளாட்சி தற்போது துவங்கி இருக்கிறார்கள் அது வரிசையாக தானாகவே வரும் – அதில் சந்தேகம் இல்லை. அவர்கள் 50% நிறைவேற்றி இருந்தால் கேட்கலாம் – ஆனால் அப்படி செய்யவில்லை என்பதால் தான் நாங்கள் நாக்கில் ஆனி அடிக்கிறோம்.

ஆதிற விவகாரங்களில் அரசியல் செய்ய வேண்டாம் என்கிற எடப்பாடி பழனிசாமி கருத்து குறித்த கேள்விக்கு :
யானை கழுத்தில் மாலை போட்டிருக்கும் போது அது அவர்களுக்கு தெரியாது – திராவிட இயக்கத்தில் ஆதீனங்களே கிடையாது. ஏனென்றால் சன்னியாசியாக உரிமை இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது – அந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் உட்படுத்தினால் சன்னியாசி ஆதீனங்கள் என்று இருக்கவே முடியாது.
சங்கராச்சாரியார் மட்டும் தான் தப்புவார் – எனவே எங்கு நிற்கிறோம் என்று தெரியாமல் தான் இருக்கும் இடத்திலே குழி நோண்டி கொண்டிருக்கக் கூடாது. அரை வேக்காடான ஆதீனம் மேலே இருக்கின்ற கிளையில் இருந்துகொண்டு அடி மரத்தை வெட்டுகிறார்கள். பாஜகவை பொறுத்தவரை அவர்களுக்குள் யார் ஆளும் கட்சியாக வரப் போகிறோம் என்பதில் சண்டை இல்லை யார் எதிர்க்கட்சியாக வரப் போகிறோம் என்பதில் தான் சண்டை உள்ளது – எப்போதும் அவர்கள் ஆளுங்கட்சியாக வரமுடியாது திமுக ஒருபோதும் பின்வாங்காது.