கோலாலம்பூரில் இருந்து வந்தவர் கைது

0 353
Stalin trichy visit

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை குடியுரிமை பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளம் மேல தெருவைச் சேர்ந்த பழனி (26) என்பவர் மீது செட்டிகுளம் காவல் நிலையத்தில் வழக்கு இருந்ததை தொடர்ந்து அவரை குடியுரிமை பிரிவு அதிகாரிகள் ஏர்போர்ட் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அவர்கள் செட்டிகுளம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து பழனியை கைது செய்து செட்டிகுளம் போலீசார் அழைத்து சென்றனர்.

Leave A Reply

Your email address will not be published.