வீட்டில் கட்டியிருந்த மாடு, கன்றுக்குட்டியை திருடிச் சென்ற மர்மநபர்கள் : காவல்நிலையத்தில் புகார்

0 241
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே நெய்க்குப்பை தர்மநாதபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர்62 வயதான லாரன்ஸ்.இவர் தன்னுடைய வாழ்வாராத்திற்க்காக பசுமாடு மற்றும் கன்றுக்குட்டியை வளர்த்து வருகிறார்.இந்நிலையில்கடந்த 9ம் தேதி இரவு வீட்டின் பின்புறம் உள்ள மாட்டுப் பட்டியில் கட்டியிருந்த பசுமாடு மற்றும் கன்று குட்டியை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். காலையில் எழுந்து பார்த்தபோது மாடு மற்றும் கன்றுகுட்டியை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சமயபுரம் காவல்நிலையத்தில் நேற்று புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.