பெருமாள் கோயில் தேரோட்டத்தில் பெண்ணிடம் 2 பவுன் செயினை பறித்து சென்ற மர்ம நபர்கள்

0 233
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அன்பிலில் நேற்று நடைபெற்ற சுந்தரராஜ பெருமாள் கோயில் தேரோட்டத்தில் சுவாமி தரிசனம் செய்ய வந்த பெண்ணிடம் 2 பவுன் தாலி செயினை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

லால்குடி அருகே ஆதிகுடி வழுதியூர் நடுத்தெருவைச் சேர்ந்தவர் வெங்கட்ராமன் ் இவருடைய மனைவி 70 வயதான தனராஜாம்.கடந்த 12 ந்தேதி அன்பில் சுந்தராஜபெருமாள் கோயில் தேரோட்டத்தை காண வந்தார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் அவர் கழுத்தில் இருந்த 2 பவுன் தங்க செயினை பறித்து சென்றனர்.பின்னர் அவர் கழுத்தைப் பார்த்த போது செயின் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் லால்குடி காவல்நிலையத்தில் நேற்று புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து செயினை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.