உலக காற்று தினத்தை முன்னிட்டு தண்ணீர் அமைப்பு சார்பில் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு
உலக காற்று தினம் முன்னிட்டு மக்கள் சக்தி இயக்கம் மற்றும் தண்ணீர் அமைப்பு சார்பில் பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 15.06.2022 மதியம் 12.30 மணியளவில் பள்ளி முதல்வர் பாலபாரதி தலைமையில்
மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் தண்ணீர் கே.சி. நீலமேகம், முன்னிலையில் நடந்தது. அனைத்து உயிர்களின் வாழ்வியல் அடிப்படை காற்று. உணவும், நீரும் இல்லாமல் கூட மனிதனால் குறிப்பிட்ட காலம் வரை வாழ முடியும். ஆனால், காற்று இல்லாமல் சில வினாடிகள் கூட வாழ முடியாது. இத்தகைய மகத்துவம் மிக்க காற்றை ெதாழில்நுட்பம், விஞ்ஞான வளர்ச்சி போன்ற காரணங்களால் தொடர்ந்து மாசுபடுத்தி வருகிறோம். இதை கட்டுப்படுத்தவும், சீர் செய்யவும் வேண்டும்.
ஐரோப்பிய காற்று ஆற்றல் ஆணையமும், உலகளாவிய காற்று ஆற்றல் மன்றமும், காற்றின் ஆற்றலை கொண்டாடும் விதமாகவும், காற்றின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 15-ந் தேதியை ‘உலக காற்று தினமாக’ கொண்டாடி வருகிறது.
இந்த நிகழ்விற்குசிறப்பு விருந்தினராக நட்சத்திர மரங்கள், ஸ்தல விருட்சங்கள், அரிய வகை மரங்கள், மறைந்து போன, போகின்ற மரங்கள் சேகரித்து அவைகளை பாதுகாப்பு கோயில்களுக்கும் மட்டும் பொதுமக்களுக்கு வழங்கும் கிராபட்டி மரம் தாமஸ் கலந்துக் கொண்டு கலந்துக் கொண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மர விதை எப்படி சேகரித்து, முளைக்க வைத்து , செடிகளை எப்படி நடுவது என்பதையும் , அருகி வரும் மரங்களை மீட்டெடுத்தல் பற்றியும்,மேலும் ஒவ்வொருவரும் தங்களது வாகனங்களைபுகை இல்லாமல் நல்லபடியாக
வைத்துக்கொள்ள வேண்டும்.
தொழிற்சாலைகளில் காற்று மாசைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மரங்களை அதிக அளவில் வளர்க்க வேண்டும்.
*நல்ல காற்றை நாம் மட்டும் சுவாசித்தால் போதாது, நமது அடுத்தத் தலைமுறைக்கும் விட்டுச்செல்ல ஒவ்வொரு தனிமனிதனும் உறுதி கொள்ள வேண்டும். என்பதை விளக்கி கூறினார்.
பள்ளி முதல்வர் பாலாபாரதி : திருச்சியில் அரிய மரமான தேற்றா மரத்தின் (Strychnos Potatorum) கொட்டை, தேற்றாங்கொட்டை என அழைக்கப்படுகிறது. இலக்கியங்களில் இல்லம் என்று அழைக்கப்படும் இம்மரக் கொட்டையை கலங்கிய நீரில் உரைத்தால் நீர் தெளிந்துவிடும். பல நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. இது நீரைத் தெளிவிப்பதாலும் உடலை தேற்றுவதாலும் இது தேற்றான் கொட்டை என பெயர் பெற்றுள்ளது. இதனை பேச்சு வழக்கில் தேத்தாங்கொட்டை என்கிறார்கள்.
என்ற கூறி இந்த மரம் இருக்கும் இடத்திற்கு அழைத்து சென்று விதைகளை சேகரிக்கப்பட்டது.

இந்த நிகழ்விற்கு பள்ளியின் சேர்மன் சிவசுப்ரமணியன் , ராமலிங்கம், பள்ளி ஆசிரியர்கள், மாணவ , மாணவிகள் பலர் கலந்துக் கொண்டார்கர்