மக்கள் பணியில் மாமன்ற உறுப்பினர் செந்தில்
மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில், தெற்கு காட்டூர் மெயின் சாலையில் தண்ணீர் லீக் ஆவதை தடுக்கும் விதமாக அதனை சரி செய்யும் பணிகளையும், பொன்முத்து நகரில் தண்ணீர் சரிவர வராத காரணத்தால் அதனை சரி செய்யும் பணிகளையும், பிளோமினால் புரம் மூன்றாவது தெருவில் தண்ணீர் லீக் ஆவதை தடுக்கும் விதமாக அதனை சரி செய்யும் பணிகளையும், காவேரி நகர் அம்பேத்கர் தெருவில் தனிநபர் இடத்தில் முட்புதர்கள் அடர்ந்து காணப்படுவதால் அதனை அகற்றும் பணிகளையும், தெற்கு காட்டூர் முருகன் கோயில் தெருவில் குறிஞ்சி மெடிக்கல் கடை ஓரமாக சாக்கடையை மூடி கட்டை கட்டி வைத்து கொண்டு இருந்ததை அப்புறப்படுத்தி அகற்றும் பணிகளையும், ஆயில் மில், காவேரி நகர், மெயின் சாலையில் குப்பைகளை அகற்றும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.