40 ஆண்டுகால மக்கள் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்த நம்ம ஊரு கவுன்சிலர் மதிவாணன்

0 310
Stalin trichy visit

அரசியல் களத்தில் திருச்சி என்றாலே திருப்புமுனையான நகரம்தான். திரும்பி பார்க்க வைக்கும் ஊரும் ஊரும் மட்டுமல்ல இங்குள்ள அமைச்சர்களின் ஒவ்வொரு செயல்பாடுகளும் திரும்பிப் பார்க்க வைத்துக் கொண்டே வருகின்றனர்.

தமிழகத்தில் திமுக பதவியேற்று ஓராண்டு கால ஆட்சியை முடித்து மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்ற இந்த தருணத்தில் திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் பல ஆண்டுகால பிரச்சனைகளும் மக்களின் நீண்டகால கோரிக்கைகள் என அடுத்தடுத்து தீர்வுகள் கிடைத்துக் கொண்டே வருகின்றன…

அதற்கு ஏற்றார் போல நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலும் வந்த சமயத்தில் திருச்சி மாநகராட்சியின் அரியமங்கலம் பகுதி 16-வது வார்டு உறுப்பினராக மு.மதிவாணன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து திருச்சி மாநகராட்சி மூன்றாவது மண்டலத்தின் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

தேர்தல் சமயங்களிலும், தேர்தலுக்கு முன்பாகவும் கூட அரியமங்கலம் பகுதியில் ஹீரோவாக தொடர்ந்து களப்பணி ஆற்றியவர் மதிவாணன் என்றால் அது மிகையாகாது.

தேர்தல் சமயங்களில் தன் பகுதி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை அப்படியே நிறைவேற்றி அசத்தி வருகிறார் இவர்!

அந்த வகையில் அரியமங்கலம் பகுதி 16வது வார்டு உட்பட்ட குன்று போல் காட்சியளிக்கும் சந்தப்பேட்டை மலையை சுற்றி சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு 300க்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகின்றனர். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் அடிப்படைத் தேவைகள் சரிவர கிடைக்கவில்லை என்றும், மலைப் பகுதியாக இருப்பதால் இரவு நேரங்களில் விஷ ஜந்துக்களின் நடமாட்டம் இருந்ததால் மிகுந்த அச்சத்துடன் வாழ்ந்து வந்தனர்.

இதுகுறித்து பலமுறை மாநகராட்சி மற்றும் கடந்த ஆட்சிக் காலங்களில் பொதுமக்கள் கோரிக்கை வைத்தபோது அது வெறும் கோரிக்கையாகவே இருந்து வந்தது…

இந்தநிலையில் கவுன்சிலராக பதவியேற்ற மதிவாணன் அப்பகுதி மக்களின் 40 ஆண்டுகால பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் என்று தான் கூற வேண்டும்…

இதுகுறித்து அரியமங்கலம் சந்தப்பேட்டை மலை மக்கள் கூறியது:-
“எங்கள் பகுதியில் உள்ள அடிப்படை தேவை குறித்து பல அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித பலனும் கிடைக்கவில்லை. இந்த சமயத்தில் நகராட்சி தேர்தல் வந்தபோது திமுக வேட்பாளர் மதிவாணன் எங்கள் பகுதிக்கு அடிப்படை வசதி செய்து தருவதாக வாக்குறுதி அளித்தார்.
அதன்பேரில் வெற்றி பெற்று எங்கள் பகுதியில் உள்ள மூன்று தெருக்களிலும் தெரு விளக்குகள் அமைத்துள்ளார்‌. இதன் மூலம் இரவு நேரங்களில் அச்சமின்றி குழந்தைகள் மற்றும் நாங்கள் நடமாட வசதியாக உள்ளது. ஏற்கனவே இருந்த சேதமடைந்த மின் விளக்குகளையும் மாற்றி புதிதாக எல்இடி லைட்டுகள் ஒளிரச் செய்து உள்ளார். மலையின்மேல் கான்கீரிட் கம்பங்கள் அமைத்து அதன் மீதும் தெரு விளக்குகளை அமைத்துக் கொடுத்துள்ளார்.

குடிநீருக்காக நாங்கள் மலையில் இருந்து கீழே இறங்கி சென்று குடிநீர் எடுத்து வரவேண்டிய சூழ்நிலை இருந்தது. ஆனால், தற்போது மதிவாணன் பதவி ஏற்ற பிறகு எங்கள் பகுதிக்கு குடிநீர் வசதி தட்டுப்பாடின்றி கிடைக்கிறது. இப்பகுதிக்கு இருசக்கர வாகனம் மட்டுமே வந்து செல்லும் வழி இருந்தது. அதனையும் விரைவில் பாதை அமைத்து தருவதாக எங்கள் கவுன்சிலர் கூறியிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது” என்றனர்

மேலும் இதுகுறித்து மதிவாணன் கூறுகையில்:-
“மாநகராட்சியின் மூன்றாவது மண்டல மாக இருக்கும் இப்பகுதியில் ஒவ்வொரு மக்களின் குறைகளுக்கும் தீர்வு கொடுக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கைகளும் குறைகளும் நிறைவேற்றித் தரப்படும். சந்தைப்பேட்டை பகுதியில் தெரு விளக்குகள் மற்றும் குடிநீர் வசதி செய்து தரப்பட்டுள்ளது. அப்பகுதிக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டபோது இரு சக்கர வாகனம் மட்டுமே செல்லும் பாதையாக இருந்தது. அமைச்சரிடம் பேசி அவருடைய சொந்த நிதியிலிருந்து பாதை அமைத்து தர ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. மக்களுக்காக களப் பணியாற்றுவது மகிழ்ச்சிதான்” என்றார்

அரியமங்கலம் பகுதியில் சட்டப் பேரவை சார்பாக அமைச்சர் ஒருபக்கமும், மாநகராட்சி சார்பாக மதிவாணன் மறுபக்கமும் நின்று அரியமங்கலம், திருவெறும்பூர் பகுதியை செம்மைப்படுத்தி வருகின்றனர் என்றால் அது மிகையாகாது…

சந்தப்பேட்டை மலைப்பகுதிக்கு மதிவாணன் ஆய்வு மேற்கொண்டபோது, அப்பகுதியில் உள்ள கூரை வீட்டில் ஆதரவின்றி வசித்துவரும் மூதாட்டி ஒருவருக்கு தன்னுடைய சொந்த பணத்திலிருந்து நிதியுதவி செய்து, வீடு கட்டுவதற்கு வழிவகை செய்வதாகவும் வாக்குறுதி அளித்து வந்தார். மேலும் அதே பகுதியில் இருந்த மாற்றுத்திறனாளி மாணவனை நேரில் சந்தித்து அவரோடு அமர்ந்து பேசி வேலை வாய்ப்புக்கும் வழி செய்வதாக கூறினார். இந்த காட்சிகளை கண்ட அப்பகுதி
மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் நெகிழ்ச்சியும் அடைந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.